நடிகை தீபிகா படுகோன் உலக சாதனையாளர் விருதை பெற்றுள்ளார்.
இதன்மூலம் இந்த விருதை பெறும் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகை தீபிகா படுகோன்.
பாலிவுட் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இந்தியில் ஓம் ஷாந்தி ஒம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தீபிகா படுகோன். பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் தீபிகா படுகோன்.
தொடர்ந்து பாலிவுட் சினிமா பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார் தீபிகா படுகோன். நடிகை தீபிகா படுகோன் கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.
பாலிவுட் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார் நடிகை தீபிகா படுகோன். இந்நிலையில் சிறந்த நடிகைக்கான உலக சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தீபிகா படுகோன்.
வெற்றியாளர்களின் பட்டியலில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஜெஃப் பெசோஸ் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தீபிகா படுகோன் தனது இரண்டாவது ஹாலிவுட் படத்தை தயாரித்து நடிக்க உள்ளார்.
இந்தப் படம் இது ஒரு கலாச்சார காதல் நகைச்சுவையாக இருக்கும் என கூறப்படுகிறது. நடிகை தீபிகா படுகோனுக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் அவர் சிறந்த நடிகைக்கான உலகளாவிய சாதனையாளர் விருதைப் பெற்றார். சர்வதேச டிஜிட்டல் மீடியா தளமான HBW செய்திகள் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
அதன்படி ஆரோக்கியம், கல்வி, ஹாஸ்பிட்டாலிட்டி, சுற்றுலா, ரியல் எஸ்டேட், கட்டிடக்கலை, பொறியியல், ஃபேஷன், கலை, பொழுதுபோக்கு மற்றும் இ-காமர்ஸ் ஆகிய துறைகளில் இருந்து இந்த ஆண்டு மொத்தம் 3000 பரிந்துரைகளில் இருந்து வெற்றியாளர்களில் ஒருவராக தீபிகா படுகோன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டில், தீபிகா படுகோன் உலகின் மிக செல்வாக்கு மிக்க 100 நபர்களின் டைம் இதழ் பட்டியலில் இடம் பிடித்தார். மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்பியதற்காக அவருக்கு கிரிஸ்டல் விருது வழங்கப்பட்டது.
இந்திய சமூகத்தை மனநலப் பிரச்சினைகளில் இருந்து தனது லைவ் லவ் லாஃப் ஃபவுண்டேஷன் மூலம் காப்பது போன்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் தீபிகா படுகோன்.