December 8, 2024, 2:36 AM
25.8 C
Chennai

பெண் பணியாளரை ஓட்டலுக்கு அழைத்த ரயில்வே ஊழியர்! செருப்பால் அடித்த பெண்கள்!

Sandal feet
Sandal feet

திருப்பதி ரயில் நிலையத்தில், ரயில் பெட்டிகளை தூய்மை செய்யும் பணிகளை தனியார் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

இந்த பணிகளை கண்காணிக்கும் சூப்பர்வைசர் குணசேகர், பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தினமும் பணி அளிக்க வேண்டும் என்றால் தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பெண் ஊழியர் ஒருவருக்கு ஃபோன் செய்து திருச்சானூர் பகுதியில் லாட்ஜில் அறை எடுத்து வைத்துள்ளதாக கூறி அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் துணிந்து அவரை கையும் களவுமாக பிடித்துக்கொடுக்க முடிவுசெய்தனர்.

இது தொடர்பாக மாதர் சங்கத்தில் புகார் கொடுக்க, அவர்கள் உங்களில் ஒருவர் ரூமுக்கு வருவதாக கூறுங்கள் அங்கே மறைந்திருந்து அவரை நாங்கள் பிடித்துவிடுகிறோம் என திட்டமிட்டு அதேபோல அப்பெண் ஊழியர் அந்த லாட்ஜுக்கு சென்றுள்ளார்.

அங்கே சென்ட் அடித்துக்கொண்டு மணமகன் போல துரை அமர்ந்திருக்க அங்கே அப்பெண் சென்றதும் கதவை அடைத்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.

ALSO READ:  திருப்பதிக்குச் செல்லும் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை!

உடனே கதவைத்தட்டி உள்ளே நுழைந்த மாதர் சங்கத்தினர் “ஏன்யா பெண்கள்னா உனக்கு கேவலமா நினைச்சுட்டியா” எனக்கேட்டு கையாளும் செருப்பாலும் அடித்து சிறப்பாக கவினித்தனர்.

மேலும் அவர்கள் அங்கிருந்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க உடனே அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டு அய்யயோ எனது வேலை பொய் மானம் மரியாதையை போய் விடும், இனி இப்படி தவறாக நடந்துகொள்ளமாட்டேன் என கையெடுத்து கும்பிட்டு கதறியுள்ளார் துரை.

தன்மானத்தை பற்றி நீ பெண்களை லாட்ஜுக்கு கூப்பிடும்போது யோசித்திருக்கவேண்டும் என கூறி அவர்கள் அளித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் துரையை அழைத்து சென்று அப்பெண்ணிடம் முறைப்படி புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்ததோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணிபுரியுமிடத்தில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டால் என்ன விபரீதம் ஏற்படுமென்பதற்கு பெண்கள் கொடுத்த தர்ம அடி ஒரு தக்க பாடமாக அமைந்துள்ளது

ALSO READ:  ஜனகை மாரியம்மன் கோயிலில் விஜயதசமி அம்பு எய்தல்!
author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...