இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில் Artificer Apprentice, Senior Secondary Recruits பணிகளுக்கு என மொத்தம் 2,500 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கணிதம் மற்றும் இயற்பியலுடன் வேதியியல் அல்லது உயிரியல் அல்லது கணினி அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் இந்த பணிக்கு பதிவு செய்யும் நபர்கள் எழுத்துத் தேர்வு, உடல் தேர்வு, மருத்துவத் தேர்வு ஆகிய முறைகளில் தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படும். பணிக்கு விண்ணப்பிக்க தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் மாத ஊதியமாக ரூ.14,600 முதல் அதிகபட்சமாக ரூ.69,100 வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.60 உடன் GST தொகையும் சேர்த்து செலுத்திட வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் பணி தொடர்பான வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
Apply Web: https://www.joinindiannavy.gov.in/