Realme இன் சில 5ஜி போனில் அட்டகாசமான தள்ளுபடி வழங்கப்படுகிறது. தீபாவளி விற்பனையை நீங்கள் தவறவிட்டிருந்தால், புதிய ஸ்மார்ட்போன் வாங்க முடியவில்லை என்றால், இதுவே சரியான நேரம்.
Realme Festive Days Sale தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது, இந்த விற்பனையின் கடைசி நாள் இன்று ஆகும். இந்த விற்பனையில் Realme 8s 5G ஸ்மார்ட்போன் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. பேங்க் ஆஃபர்கள், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் என பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.
Realme 8s 5G இன் ரூ. 22,999க்கு வெளியானது. ஆனால் Realme Festive Days Sale இல் 13% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி Realme 8s 5G போன் ஐ ரூ.19,999க்கு பெறலாம். அத்துடன் பல வங்கிச் சலுகைகள் மற்றும் பரிமாற்றச் சலுகைகள் இதில் உள்ளன, அதைப் பெறுவதன் மூலம் நீங்கள் தொலைபேசியை மிகவும் மலிவாக வாங்கலாம்.
Realme 8s 5G இல் வங்கி சலுகைகள்
SBI கார்டில் பணம் செலுத்தி போனை வாங்கினால், ரூ.750 வரை தள்ளுபடி கிடைக்கும். இதனுடன் கூடுதலாக 1500 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும்.
இதைப் பெற்ற பிறகு, போனின் விலை 17,749 ஆக இருக்கும். ஆனால் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் எடுத்த பிறகு போனை இன்னும் மலிவாக வாங்கலாம்.
Realme 8s 5G இல் ரூ.15,750 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. உங்கள் பழைய போனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடி கிடைக்கும். ஆனால் உங்கள் போனின் நிலை நன்றாக இருக்கும் போது மற்றும் மாடல் லேட்டஸ்ட்டாக இருக்கும் போது மட்டுமே இந்த ஆஃப் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் Realme 8s 5G ஐ 1,999 ரூபாய்க்கு வாங்க முடியும்.
இந்த ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் முழு-எச்டி+ (1080 x 2400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, 20:9 விகிதம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் பாதுகாப்பிற்காக கைரேகை சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது.
MediaTek Dimensity 810 SoC ஆனது 8GB வரை LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.1 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 5GB மெய்நிகர் ரேம் ஆதரவையும் கொண்டுள்ளது.
கேமரா சென்சார்களில் 64MP முதன்மை சென்சார், 2MP போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் பின்புற பேனலில் 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா சென்சார் ஆகியவை அடங்கும். இது தவிர, போன் 5,000 mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.