படை உலர…
வெள்ளைப் பூண்டை நசுக்கி அதன் சாற்றைப் படை மீது தடவி வரலாம். நாள்பட்ட படையாயிருந்தால் ஆலிவ் எண்ணெயை பூண்டுச் சாற்றுடன் குழைத்து தடவி வர நாள்கைந்து நாள்களில் படை உலர்ந்து விடும்.
பாம்புக் கடிக்கு…
வாழைப்பட்டைச் சாற்றுடன். நெல்லிச்சாற்றையும் கலந்து பாம்பு கடித்தவரை குடிக்கச் சொல்ல வேண்டும். காலங்கடத்தாது பாம்பு தீண்டிய உடன் இதைக் கொடுக்க விஷம் முறிந்து விடும்.
பேய்ச் சுரைக்காயின் வேரைக் கொண்டு வந்து நசுக்கி, இரண்டு கொட்டைப் பாக்களவு உள்ளுக்குக் கொடுக்கவும். அத்துடன் கடிவாயில் பேய்ச்சுரையின் இலையை அரைத்துக் கட்டி விடவும்.
மூச்சு அடங்கி ஓடுங்கிய உயிர்கூட மீண்டும் திரும்பும்.
பாம்பு கடித்து விட்டால் 5 வெற்றிலை, சிறு துண்டு சுக்கு, இரண்டு சிட்டிகை உப்பு இவற்றைக் கசக்கி கண், காது. மூக்கு இவற்றில் இரண்டு துளிகள் விட விஷம் இறங்கி விடும்.
பார்வைக் கோளாறுகள்
சாதிக்காயை பசும்பாலில் இழைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வாருங்கள். கண்ணுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன் பார்வையும் பளிச்சிடும். இரவில் பற்றுப் போட்டுக் கொண்டு காலையில் கழுவி விடுவது நல்லது.
இளவயதில் வைட்டமின் ‘ஏ’ சத்துக் குறைவால் கண் பார்வையில் குறை ஏற்படும். முருங்கைக் கீரை அல்லது அகத்திக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர இரண்டொரு மாதங்களில் கண்ணாடியைக் கழற்றி விடலாம்.
நந்தியாவட்டைப் பூவின் இதழ்களை எடுத்து அதை அப்படியே தாய்ப்பாலில் ஊற வைத்து சில துளிகளை கண்ணில் பிழிய கண்களில் பூ விழுந்திருந்தால் மறைந்து விடும்.
கண்ணில் சதை வளர்ந்தால் பேரீச்சங் கொட்டையை பன்னீரில் இழைத்து கண்ணுக்கு மை போல் போடவும். தாய்ப்பாலிலுள் போடலாம்.
அவுரிச் செடியின் இதழ்களைக் கொண்டு வந்து அரைத்து தினமும் காலையில் ஒரு நெல்லிக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு பால் அருந்த மூன்று நாள்களில் மாலைக்கண் நோய் குணமாகி விடும். இந்த மூன்று நாள்களும் உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும்.
நிழலில் உலர்த்திய மந்தாரைப் பூவை இடித்துச் சூரணமாக்கி தினமும் சிட்டிகையளவு எடுத்துச் சர்க்கரை கூட்டி சாப்பிட மலமிளகும். உடலில் வெப்பம் மாறும். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும். உஷ்ண இருமல் நீங்கும்.
பார்வைக் கோளாறுகள் குணமடைய…
படுக்கப் போவதற்கு முன் ஒரு துளி எலுமிச்சை சாற்றை கண்களில் விட்டுக் கொள்ள முதலில் கண்கள் கரிக்கும். அப்படியே தூங்கிவிட்டால் சரியாகி விடும். சில நாள்களில் உங்கள் பார்வை தெளிவடைந்து விடும்.
அமுக்கராக் கிழங்கையும்`’அதி மதுரத்தையும் சமமாக எடுத்துத் தூள் செய்து ஒரு சிட்டிகை அளவு நெல்லிக்காய் சாற்றில் காலை மாவை சாப்பிட்டு வர கண் பர்வை பளிச்சிடும்.
சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் உண்டாகும் கண் ரோகங்களுக்கு உருளைக்கிழங்கு நல்ல பலன் தரும். கண்ணில் நீர் வடிதல். கண் இமைகளின் நமைச்சல், கண் சிவப்பு, கண் வலி முதலியவற்றிற்கு உருளைக்கிழங்கை நீர் விடாமல் நன்றாக பிசைந்து கண்ணில் வைத்து காலை மாலைகளில் கட்டிவரச் சிறந்த பலன் அளிக்கும்.
சிறுவர்களுக்கு தோன்றும் கண் நோய்களுக்கும் பெரியவர்களின் கண் எரிச்சல், அரிப்பு முதலியவற்றிற்கும் கற்றாழைச் சோற்றை எடுத்துக் கண்களில் வைத்துக் கட்டி வர குணம் தெரியும்.
ஆடாதொடைப் பூவை வதக்கி இரவில் படுப்பதற்கு முன்பு காலில் வைத்துக் கட்டி காலையில் எடுத்து எறிந்து விடலாம். உடல் வெப்பத்தால் ஏற்படும் கண் நோய்கள் இதனால் நீங்கும்.
பால் சுரக்க…
முற்றிய பப்பாளிக் காய்களைத் தனியாகவோ அல்லது கறியாக சமைத்தோ உண்ண தாய்ப் பாலூட்டும் பெண்களுக்குப் பால் சுரக்கும்.
எள்ளுக்குப் பாலைப் பெருக்கும் குணமுண்டு. ஆகாரத்தோடு எந்த ரூபத்திலாவது எள்ளைச் சேர்த்து வர பால் பெருகுவதோடு உடலும் திடகாத்திரமாக விளங்கும்.