
மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் (NALCO) காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 86 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.15 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மேலாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 86
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளநிலை அல்லது முதுநிலை பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், 2 முதல் 23 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 32 முதல் 58 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.67,700 முதல் அதிகபட்சம் ரூ.2,15,900 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nalcoindia.com அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் 07.12.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nalcoindia.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.