
வெள்ளாட்டுப் பாலின் மகத்துவம்
வெள்ளாட்டுப் பால் உடலுக்கு மிகவும் நல்லது. தினசரி ஆட்டுப் பால் குடித்து வர நீரிழிவு நோய், காச நோய், புற்றுநோய், தொழு நோய்.
தோல் சம்பந்தமான நோய்கள் எதுவும் வராது. உடலுக்கு பலம் உண்டாகும். ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு இக்குறை நீங்கும்.
வெந்நீரின் மகத்துவம்
- குடான வெந்நீர் மருத்துவ அடிப்படையில் கசப்புச் சுவையுள்ளதே. எப்போதும் குடிக்க வெந்நீர் பயன்படுத்தி வருவது நல்லது. நரம்புத் தளர்ச்சி வராமலிருக்க அது உதவும்.
வேப்பமர மருத்துவம்
வேப்பம் பட்டை : சருமப்படை, தேகப்புண் இவற்றைக் குணமாக்கும்.
வேப்பிலை : வீக்கத்தைக் குறைக்கும். இரத்த சுத்தி செய்யும். வேப்பங்காய் : வயிற்றிலுள்ள ரணத்தை ஆற்றுகிறது. நரம்புகளுக்கு பலத்தைக் கொடுக்கும்.
வேப்பம் பழம்: மூளைக்கு பலத்தைக் கொடுக்கும். சுவாச ரணத்தை அழிக்கும்.
வேப்பம் விதை : தலையில் ஏற்படும் ரோகம் அனைத்தையும் தீர்க்கும்.
வேப்பம் பூ : இரத்தத்தை சுத்தி செய்யும்.
வேப்பம் வேர் : முறை ஜூரத்தை போக்குவதுடன் இரத்த சுத்தியும் செய்கிறது. வேப்பம் பிசின் : தாது விருத்தி செய்கிறது. மூளைக்கு பலத்தைக்
கொடுக்கிறது.
தூதுவளையில் மருத்துவம்
- சுவாச, காச நோய்களில் இளைப்பிருமல். சளித்தொல்லை போன்ற வற்றிற்கு தூதுவளை இலை ஒரு சிறந்த மருந்து. தினசரி பச்சை யாகவோ. தூதுவளை இலையைப் பறித்து பக்குவம் செய்தும் சாப்பிடலாம்.
மூக்கிரட்டையில் மருத்துவம்
தினமும் அதிகாலையில் மூக்கிரட்டை இலைச் சாற்றினை ஒரு ஸ்பூன் அளவு இரண்டு வாரங்கள் பருகி வர கல்வீரல் சம்பந்தமான நோய்த் தொல்லைகள் நீங்கி சிறுநீர்கள் சீரடையும். பலவீனம் அகலும். முகத்தில் ஒளியும் தெம்பும் ஏற்படும்.