
ஜகதீஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் இன்று.
உலகிற்கு கல்வியறிவூட்டிய மிகப்பெரும் பல்கலைக்கழகம் பாரத தேசம். பல நூறு ஆண்டுகள் பல்வேறுபட்ட ஆட்சியாளர்களின் கீழ் அல்லல்பட்ட பாரத தேசத்தில் பல்வேறு துறைகளிலும் மிகப்புகழ்பெற்ற நிபுணர்கள் பலர் இருந்தனர். இன்றைய இளைய தலைமுறை எப்போதும் நினைவு கொள்ள வேண்டிய மனிதர்கள் இவர்கள். ஆனால் ஸ்மார்ட்போன் மயக்கத்தில் கிறங்கிக் கிடக்கும் இளம் தலைமுறை இப்படிப்பட்டவர்களை மறந்து திரிகிறது
தாவர இயலில் உலகப் புகழ்பெற்ற பல்கலை நிபுணர் ரேடியோ சயின்சின் மூலாதாரம் போன்றவர் ஜெகதீஸ் சந்திரபோஸ். இவர் வங்காளத்தில் 1858 நவம்பர் 30 அன்று பிறந்தார். தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்றும் அவையும் நம்மைப்போலவே தட்பவெப்ப நிலைகளால் பாதிக்கப்படுகிறது என்றும் தன் ஆய்வுகளால் உலகிற்கு அறிவித்த தாவர இயல் நிபுணர் ஜெகதீஸ் சந்திரபோஸ். இவருடைய கொள்கைகள் உலகெங்கும் வியாபித்த மகா விருட்சமாகப் பரவியது.
கணம்தோறும் வளர்ந்து கொண்டிருக்கும் தாவரங்களின் திசுக்களை பல மடங்கு பெரிதாக்கிக் காட்டும் க்ரிஸ்மோக்ராப் என்ற கருவியை தயாரித்து உலக விஞ்ஞானிகளுக்கு பாரத தேசம் ஆன்மீகத்தில் மட்டுமின்றி நவீன விஞ்ஞானத்திலும் முன்னேறுகிறது என்று நிரூபித்தார் ஜெகதீஸ் சந்திரபோஸ். ஒயர்லெஸ் சிக்னலின் பரிசோதனையிலும் அற்புத முன்னேற்றத்தை சாதித்து ரேடியோ சிக்னல்களை அடையாளம் காண்பதற்கு முதல்முறையாக அதனை பயன்படுத்தி ரேடியோ முன்னோடியாகப் புகழ் பெற்றார். ராடார் இயந்திர தொடர் எந்திரத்தின் பணி முறையை மேம்படுத்தி பல புதிய அம்சங்களை வெளியிட்டு உலகத்திற்கு அளித்து தன் பன்முகத் திறமையை நிரூபித்தார் போஸ்.
நவீன கருவிகள் அவ்வளவாக கிடைக்காத அந்த காலத்திலேயே தன் சம்பளம் முழுவதையும் அதற்காக செலவிட்டு தானே சொந்தமாக ஆய்வுசாலையை கட்டி அதற்கு தேவையான கருவிகளையும் சேர்த்து எதிர்மறைச சூழலையும் தனக்கு அனுகூலமமாக மாற்றிக்கொண்டு சாதித்த ஆதர்ச விஞ்ஞானி போஸ்.
போஸின் பெயரால் கல்கத்தாவிலுள்ள போஸ் பரிசோதனை அமைப்பு, ராயல் சொசைட்டி ஃபெலோஷிப், இந்தியன் காங்கிரஸ் தலைமைப் பதவி போன்றவை போஸின் மிகப்புகழ்பெற்ற திறமைக்கு சிறு அறிமுகங்கள் மட்டுமே.
மாடர்ன் மகரிஷியும் தாவர இயலின் மகா விருட்சமுமான ஜெகதீஸ் சந்திரபோஸின் பிறந்தநாளான இன்று மரங்களை நட்டு வளர்த்து சுற்றுச் சூழலின் சமச்சீருக்கு பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுப்பதே அவருக்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்.