தமிழ்நாடு போலீஸ் என்று கூறி பெற்ற பெண்ணை பெங்களூரில் நடுரோட்டில் அடித்து உதைத்தவரால் பரபரப்பு

Published:

bangalore-girlபெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சாலையில் வைத்து இளம்பெண்ணை அடித்து உதைத்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தத் தந்தை தன்னை தமிழ்நாடு போலீஸ் என்று கூறியுள்ளார். 50க்கும் மேற்பட்டோர் சுற்றி நின்று இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, இந்தப் படங்களை ஒரு பெண் தனது பேஸ்புக்கில் வெளியிட்டு மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளார். பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார் நிவேதிதா. இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு இளம்பெண்ணை அவரது தந்தை நடுரோட்டில் தலை முடியைப் பிடித்து இழுத்து அடித்து உதைக்கும் படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இது குறித்த ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பெங்களூருவில் நடந்துள்ள இந்தச் சம்ப்வம் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் நிவேதிதா. இந்தப் படங்களைப் பார்த்து பேஸ்புக்கில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் தனது பேஸ்புக்கில் தெரிவித்திருந்தபோது, அந்தப் பெண் பெங்களூருவில் வேலை பார்ப்பவர் என்று தெரிகிறது. அவரை நடு ரோட்டில் அடித்து உதைத்தவர் அவரது தந்தையாகவே இருக்கலாம். பொது மக்கள் அதிகம் பேர் கூடியிருந்த நிலையில், தனது பெண்ணை அநாகரிகமாக ரோட்டில் போட்டு அடித்துக் காயப்படுத்தினார். அந்தப் பெண்ணுக்கு 25 வயது இருக்கலாம். அடித்த அந்த நபர், மதுரையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் என்று தெரிகிறது. அவர் அப்படித்தான் கூறியுள்ளார்.. அவருக்கு அருகே இருந்து ஒரு பெண் அமைதியாக எந்த வித சலனமும் இன்றி இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அந்தப் பெண்ணின் தாய் என்று தெரிகிறது. அவர் அங்கே ஆசிரியையாக வேலை பார்க்கிறாராம். கணவருக்கு ஆதரவாக அந்தப் பெண்ணை அவர் தன் பங்குக்கு குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டாயே என்று திட்டித் தீர்த்தார். அப்போது, இந்தச் சம்பவத்தை அந்த ரோட்டில் 50-க்கும் மேற்பட்டவர்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். நான் அந்த இளம் பெண்ணை அடித்த நபரின் பிடியில் இருந்து அவளது தலை முடியை விடுவித்தேன். அதற்குள் அந்தப் பெண் கீழே விழுந்துவிட்டார். அந்த நபரை பின்னால் தள்ளிவிட்டு எனது காரில் அந்த பெண்ணை ஏற்றினேன். ஆனால் அந்த நபர் காரின் முன்பகுதியில் அமர்ந்து கொண்டு காரை எடுக்கவிடாமல் தடுத்தார். அதனால், போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து 3 பேரையும் அல்சூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பெண் யாரையோ விரும்புவதாகவும், இதுபற்றி அறிந்த தந்தை நடுரோட்டில் அவரை தாக்கி உள்ளதாகவும் தெரிகிறது. அந்தப் பெண் என்ன சொல்ல வருகிறார் என்பதைக்கூட அவர்கள் காது கொடுத்துக் கேட்கவில்லை. வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணை மதுரைக்கு இழுத்துச் சென்று தாங்கள் விரும்பும் நபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால், இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார் அவர்.’’ என்று அந்தப் பெண் நிவேதிதா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். போலீசாரோ, இந்த விவகாரத்தில் யாரும் புகார் கொடுக்கவில்லை. அவர்கள் மூவரும் இது எங்கள் குடும்ப விவகாரம் நாங்களே பேசித் தீர்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டதால் நடவடிக்கை எதுவும் எடுப்பதற்கில்லை என்று தெரிவித்து விட்டனர். இருப்பினும், பெங்களூருவில் நடுரோட்டில் திடீரென ஒருவர் பெண்ணை அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. BANGALORE-VIOLENCE

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img