தொட்டவுடன் பாம்பு கொடுத்த ரியாக்ஷன்..! வைரல் வீடியோ!

Published:

snake 2 5 - 2026

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகமாகும். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் பார்த்து வருகிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்புகளின் வீடியோக்கள் (Snake Video) இணையத்தை கலக்கி வருகின்றன.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ அனைத்து சமூக தளங்களிலும் பரவி வருகிறது. இந்த பாம்பின் வீடியோ viralhog என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

கருப்பு நிற பாம்பு ஒன்று தரையில் அமர்ந்திருப்பதையும், அதை ஒருவர் தனது விரல்களால் தொடுவதையும் வீடியோவில் காணலாம். அந்த நபர் பாம்பை தொட்டவுடன், பாம்பு இறப்பது போல் செயல்படத் தொடங்குகிறது, அங்கு இருப்பவர் அந்த பாம்பின் செயலைக் கண்டு சிரிக்கத் தொடங்குகிறார்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

தற்போது பாம்பின் இந்த அட்டகாசமான நடிப்புக்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவை இதுவரை 90 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். வீடியோவின் தலைப்பு, ‘The drama!’ என்று கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாம்பு ஹாக்னோஸ் இனத்தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ எப்போது, ​​​​எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

எனினும், இந்த வீடியோ வைரலாகி (Viral Video) வருகிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CXY4PNKhVYA/?utm_source=ig_web_copy_link

Related articles

Recent articles

spot_img