மீண்டும் ஏமாற்றம்: வருமான வரி விலக்கு…?

இந்தியா சற்றுமுன் வணிகம்

புது தில்லி:

வியாழக் கிழமை இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.

இந்த பட்ஜெட் உரை குறித்து பெரும் எதிர்பார்ப்பு பொது மக்களிடம் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக, வரி செலுத்தும் மாத வருமானம் பெறும் மத்திய நடுத்தர வர்க்கத்தினரிடம் ஏற்பட்டிருந்தது. செலவினங்கள் அதிகரித்துள்ள சூழலில், தங்களின் வருமான வரியில் வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப் படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

குறிப்பாக, பெண்கள், மற்றும் வயதானவர்கள் ரூ. 3.5 லட்சம் வரை வரிவிலக்கு உச்ச வரம்பு கொண்டு வரப் படலாம் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அருண் ஜேட்லி அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருந்தது.

இது குறித்து பேசிய அவர்,  வருமான வரி விலக்கு உச்சவரம்பு ₹2.5 லட்சத்திலிருந்து உயர்த்தும் திட்டம் ஏதுமில்லை என்று அறிவித்தார்.

அவர் அறிவித்ததில் முக்கிய அம்சங்கள்…

தனிநபர் வருமான வரி வரம்பு ரூ2.5 லட்சம் என்பதில் மாற்றம் இல்லை

தனிநபர் வருமான வரி 12.6% அதிகரிப்பு

நிதிப்பற்றாக்குறை 3.3% ஆக இருக்கும்

41% கூடுதலாக வருமான வரி கணக்குகள் தாக்கல்

எம்.பி.க்களின் ஊதியம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்வு

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஊதியம் உயர்வு

ஜனாதிபதியின் ஊதியம் ரூ5 லட்சம், துணை ஜனாதிபதிக்கு ரூ.4 லட்சம் ஊதிய உயர்வு

அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ஆதாரைப் போல தனி அடையாள அட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.