குடியரசுத் தலைவர் சம்பளம் ரு5 லட்சமாக உயர்வு!

Published:

புது தில்லி:

வியாழக் கிழமை இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. அப்போது அவர் குடியரசுத் தலைவருக்கான சம்பளம் உயர்த்தப் படுவதாகக் கூறினார்.

குடியரசு தலைவருக்கு சம்பளம் மாதம் ரூ 5 லட்சம், துணை குடியரசு தலைவருக்கு ரூ 4 லட்சம், ஆளுநருக்கு ரூ 3.5 லட்சமாக உயர்த்தப் படுகிறது.

பணவீக்கத்திற்கு ஏற்ப எம்.பி.க்களின் சம்பளம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்று கூறினார் அருண் ஜேட்லி.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Related articles

Recent articles

spot_img