புது தில்லி:
வரும் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. 2018-19 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் பொது மக்கள் எதிர்பார்த்த பெரும் அம்சங்கள் இல்லாமல் அச்சங்களை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப் படுகிறது.
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையினை வாசிக்கும் போது, அதில் இடம் பெற்ற பல அம்சங்களுக்கு பிரதமர் மோடி மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தார். ஆனால், வருமான வரிச் சலுகை உள்ளிட்ட எதிர்பார்ப்புகளை வைத்திருந்த பொதுமக்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சரியாக ஒரு மணிநேரம் 51 நிமிடம் மத்திய நிதிநிலை அறிக்கையை வாசித்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
முற்பகல் 11 மணி அளவில் உரையை வாசிக்கத் தொடங்கி, 1 மணி அளவில் தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அருண் ஜேட்லி.
ஆனால், பட்ஜெட் தாக்கலின் எதிரொலியாக மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. பின்னர் 200 புள்ளிகள் ஏறின. மொத்தம் 700 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டன.



