அசாமுக்குள் நுழைய சுப்பிரமணிய சாமிக்கு தடை விதிப்போம்: தருண் கோகோய்

இந்தியா

subraman_mwn சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அசாம் மாநில முதல்வர் தருண் கோகோய், இது போல் அவர் பேசினால் அவர் அசாமுக்குள் நுழைய தடை விதிப்போம் என்று எச்சரித்துள்ளார். சுப்ரமணியசாமி அசாம் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழக விழாவில் பேசியபோது, “மசூதிகளும், தேவாலயங்களும் பிரார்த்தனை செய்வதற்காகக் கூடும் கட்டடங்கள் என்பதால், அவற்றை இடிக்கலாம், சவூதி அரேபியாவில் கூட மசூதிகள் இடிக்கப்படுகின்றன; ஆனால், கோவில்களில் தெய்வங்கள் குடியிருப்பதால் அவற்றை இடிக்கக் கூடாது” என்று கூறினார். அவரின் இந்தப் பேச்சு சர்ச்சைக்குரியதாகியுள்ளது. இதற்கு பல்வேறு மத அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில் சுப்பிரமணியசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், ஐரோப்பாவில் சர்ச்கள் மூடப்பட்டு, அங்கே மதுபானக் கூடங்கள் திறக்கப்பட்டுள்ள செய்திகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்நிலையில் சுப்ரமணியன் சாமியின் பேச்சு குறித்து சத்ராமுக்தி சங்கிராம் சமிதி என்ற அமைப்பு அளித்த புகாரின்பேரில் அவருக்கு எதிராக கௌஹாத்தி லட்டாசில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.