மோடியின் மனைவி யசோதா பென் கார் விபத்தில் காயம்!

இந்தியா சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் ராஜஸ்தானில் நடந்த கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறிய வயதில் யசோதா பென் என்பவருடன் குடும்பத்தினர் வற்புறுத்தலில் திருமணம் நடைபெற்றது. ஆனால், குடும்ப வாழ்வில் பற்று கொண்டிருக்காத மோடி, சமூக சேவைக்காக வீட்டை விட்டு வெளியில் வந்தார். பின்னர் அவர்கள் ஒன்று சேரவே இல்லை.

யசோதா பென் பள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். தன் சகோதரருடன் வசித்து வரும் யசோதா பென், இன்று ராஜஸ்தானில் உள்ள உறவினர்களைப் பார்த்துவிட்டு குஜராத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வந்த கார் எதிர்பாராத விதமாக திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் யசோதா பென் காயம் அடைந்தார். பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.