மூப்புக்கு முன்னரே செய்ய வேண்டியது: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் ஸ்ரீசிருங்கேரி மகிமை
bharathi theerthar
bharathi theerthar

நீலகண்ட தீக்ஷிதர் ஓரிடத்தில்,

அயி ப்ராதச்சேத: பரமமுபதேசம் ச்ருணு மம
ஸ்மராரேரர்சாயாம் படுஷு கரணேஷு ஸ்மர பலம் I

“ஹே மனமே! உனக்கு ஒரு நல்ல அறிவுரை கூறுகிறேன் கேள்! இந்திரியங்களெல்லாம் சரியாக இருக்கும் சமயத்தில்தான் நீ பகவானைப் பூஜை செய்து அவனை ஸேவிக்க முடியும்” என்கிறார்.

ஏனென்றால், தன்னுடைய சக்தியெல்லாம் போய்விட்ட பிறகு ஒருவன் கோயிலுக்குப் போக வேண்டும் என்று நினைத்தாலும் அவனால் போக முடியாது.

சிவராத்திரியன்று கண் விழித்துச் சிவ பூஜை செய்ய நினைத்தாலோ, கிருஷ்ணாஷ்டமியன்று நடுநிசி வரை பூஜை செய்ய நினைத்தாலோ அது முடியாது.

ஆகவே, ஒருவன் கிருதார்த்தன் ஆக வேண்டுமென்றால் இந்திரியங்கள் எல்லாம் சரியாக இருக்கும் சமயத்திலேயே பகவத் ஆராதனை, பகவத் சேவை முதலியவை செய்ய வேண்டும்.

ஜீவனுக்கு ஆனந்தம் கிடைக்க வேண்டுமென்றால், மூப்பு வருவதற்கு முன்னரேயே ஒருவன் பகவத்பாதாள் சொன்ன ரீதியில் ஈச்வரனை ஆராதிக்க வேண்டும்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.