டி20: இலங்கை அணியை வென்ற ஆஸ்திரேலியா!

Published:

icc t20 world cup
icc t20 world cup

ஐ.சி.சி. டி20 போட்டிகள் – 28.10.2021
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்

வியாழக்கிழமை, துபாயில் நடைபெற்ற இலங்கை ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான குரூப் 1 பிரிவுப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.

(இலங்கை 154/6, ஆஸ்திரேலியா 155/3, 17 ஓவரில்) பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் ஃபீல்டிங் செய்ய முடிவுசெய்தது.

எனவே மட்டையாட வந்த இலங்கை அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான நிசங்கா மூன்றாவது ஓவரில் 7 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

முதல் ஆறு பவர்ப்ளே ஓவர்களில் இலங்கை வீரர்கள் நன்றாக ஆடி 53 ரன் சேர்த்தனர். 8,10,12,14ஆவது ஓவர்களை வீசிய ஸாம்பா முதல் ஓவரில் 4 ரன், இரண்டாவது ஓவரில் 4 ரன்னும் ஒரு விக்கட்டும், மூன்றாவது ஓவரில் இரண்டு ரன்னும் ஒரு விக்கட்டும், நாலாவது ஓவரில் 2 ரன் என வீசி இலங்கையின் ரன்ரேட்டைக் குறைத்தார்.

ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் இலங்கை வீரர்கள் மீண்டும் சிறப்பாக ஆடியதால், அவர்களது அணி 154 ரன் எடுத்தது. அடுத்து ஆடவந்த ஆஸ்திரேலிய அணி, 50 ரன்னை 4.2 ஓவர்களிலும், 100 ரன்னை 11 ஓவர்களிலும், 150 ரன்னை 16.4 ஓவரிலும் அடித்தனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

வார்னர் (65), ஃபின்ச் (37), ஸ்மித் (28), ஸ்டொய்னிஸ் (16) அடித்து 17 ஓவர்களில் இலக்கை எட்டினர். குரூப் 1இல் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் தலா 4 புள்ளிகளுடன் முதலிரண்டு இடத்தில் உள்ளனர்.

நாளை அபுதாபியில் ஆஃப்கானிஸ்தான்-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே (குரூப் 2) ஆட்டம் நடைபெறும்.

Related articles

Recent articles

spot_img