தேய்பிறை அஷ்டமி: கால பைரவாஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

sri maha kaal bhairavar hd image
sri maha kaal bhairavar hd image

தேய்பிறை அஷ்டமி !

ஸ்ரீ சங்கராசார்யார் அருளிய கால பைரவாஷ்டகம்

  1. தேவராஜ – ஸேவ்யமான – பாவனாங்க்ரி பங்கஜம்
    வ்யாலயஜ்ஞஸூத்ர – மிந்துசேகரம் – க்ருபாகரம்
    நாரதாதியோகிப்ருந்த – வந்தினம் திகம்பரம்
    காசிகா – புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : இந்திரனால் சேவிக்கப் பெறுபவரும், புனிதமான திருவடி தாமரையை உடையவரும், அரவத்தை பூணூலாக அணிந்தவரும், சந்திரனை சிரசில் வைத்தவரும், கருணை கொண்டவரும், நாரதர் முதலான யோகியர் குழாங்களால் வணங்கப் பெறுபவரும், திசைகளை ஆடையாக உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

  1. பானுகோடி – பாஸ்வரம் பவாப்திகாரகம் பரம்
    நீலகண்ட – மீப்ஸிதார்த்த – தாயகம் த்ரிலோசனம்
    காலகால – மம்புஜாக்ஷ – மக்ஷசூல – மக்ஷரம்
    காசிகா – புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றுபவரும், முதல்வரும், நீலகண்டத்தை உடையவரும், அடியார்கள் வேண்டும் பொருளை அளிப்பவரும் முக்கண்ணரும், காலனுக்கு காலனாக இருப்பவரும், தாமரைமலர் போன்ற கண்ணையுடையவரும், சொக்கட்டானில் சூரரும், குறைவற்றவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

  1. சூலடங்க – பாச – தண்ட – பாணி – மாதிகாரணம்
    ச்யாமகாய – மாதிதேவ – மக்ஷரம் நிராமயம்
    பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர – தாண்டவப்ரியம்
    காசிகா – புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : சூலம், மழு, பாசம், தண்டம் இவைகளை கையில் ஏந்தியவரும், முதல் காரணரும், கரிய திருமேனி வாய்ந்தவரும், முதல் கடவுளரும், அழிவற்றவரும், பிணியற்றவரும், பயமுறும் பராக்கிரமமும் வாய்ந்தவரும், முக்திச் செல்வரும், அற்புத தாண்டவங்களில் ஆவல் கொண்டவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

  1. புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த – சாரு விக்ரஹம்
    பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக – விக்ரஹம்
    நிக்வணன் – மனோஜ்ஞஹேம – கிங்கிணீலஸத்கடிம்
    காசிகா – புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : போகம், மோக்ஷம் இவைகளை அளிப்பவரும் பிரசித்தி பெற்றதும் அழகியதுமாகிய வடிவமுடையவரும், அடியார்களிடம் அன்புள்ளவரும், காத்தல் கடவுளாய் இருப்பவரும், எல்லா உலகத்தையும் தன் வடிவமாகக் கொண்டவரும், நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

  1. தர்மஸேபாலகம் த்வதர்மமார்க்க நாசகம்
    கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும்
    ஸ்வர்ண வர்ணசேஷபாச – சோபிதாங்கமண்டலம்
    காசிகா – புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : தர்மமாகிய அணையை பாதுகாப்பவரும், அதர்ம வழியை அழிக்கிறவரும், கன்மமாயா, மலங்களை போக்குபவரும், நற்சுகம் அளிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், பொன்மயமான சடை கற்றையால் விளங்கும் திருமேனி உடையவரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

  1. ரத்னபாதுகா – ப்ரபாபிரமபாத – யுக்மகம்
    நித்யமத்வீதிய -மிஷ்டதைவதம் நிரஞ்ஜனம்
    ம்ருத்யுதர்ப்ப – நாசனம் கராலதம்ஷ்ட்ர – மோக்ஷணம்
    காசிகா – புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : ரத்ன பாதுகைகளின் ஒளியால் அழகு பெற்ற இரு திருவடிகளை உடையவரும், நித்யரும், இரண்டற்றவரும் இஷ்ட தெய்வமாக உள்ளவரும், குற்றமற்றவரும். மறிலியின் கர்வத்தை அடக்குபவரும், கூரிய அகன்றப் பற்களால் பயமுறச் செய்பவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

  1. அட்டஹாஸ – பின்னபத்மஜாண்ட – கோசஸந்ததிம்
    த்ருஷ்டிபாத – நஷ்டபாப – ஜாலமுக்ரசாஸனம்
    அஷ்டஸித்தி – தாயகம் கபாலிமாலிகந்தரம்
    காசிகா – புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : அட்டகாச ஒலியினால் தாமரையில் தோன்றிய அண்ட கோசங்களை பிளக்குபவரும், கண்விழி நோக்கத்தால் பாபக் குவியலை அழிக்கின்றவரும், பாபம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை விதிப்பவரும், அஷ்ட சித்தியை அளிப்பவரும், கபால மாலையால் விளங்கும் கழுத்தை உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

  1. பூதஸங்க – நாயகம் விசாலகீர்த்திதாயகம்
    காசிவாஸ – லோகபுண்ய – பாபசோதகம் விபும்
    நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
    காசிகா – புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : பூத கூட்டங்களுக்கு தலைவரும், விரிந்த புகழை அளிப்பவரும், காசியம்பதியில் வசிக்கும் மக்களது பாப புண்ணியங்களை பரிசோதிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், நீதி வழியில் கைதேர்ந்தவரும், பழமையானவரும், உலகத்துக்கு கர்த்தரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

  1. காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
    ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ர – புண்ய – வர்த்தனம்
    சோகமோ ஹதைன்யலோப – கோபதாபநாசனம்
    தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம்

பொருள் : மனதுக்கு குதூகலத்தையும், ஞானம், முக்தி, சாதகத்தையும், பல வகைப்பட்ட புண்ணிய விருத்தியையும், வருத்தம், மயக்கம், ஏழ்மை, பேராசை, கோபம், தாபம் ஆகியவைகளின் நீக்கத்தையும் அளிக்கவல்லதாகிய இந்த கால பைரவாஷ்டகத்தை எவர்கள் படிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக கால பைரவ மூர்த்தியின் திருவடியருளைப் பெறுகின்றார்கள்.

(இதி ஸ்ரீமத் சங்கராசார்ய – விரசிதம் கால பைரவாஷ்டகம் ஸம்பூர்ணம்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories