பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப் படாததைக் கண்டித்து ஆந்திராவில் முழு வேலைநிறுத்தம்

ஹைதராபாத்:  மத்திய பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்காததை கண்டித்து  ஆந்திராவில் பந்த் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியும் உள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில், கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி அதிருப்தி அடைந்தது,. தங்கள் மாநிலத்துக்கு நிதி ஒதுக்கப் படாத கோபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை அறிவித்தார்.பின்னர் மாநில நலன் கருதி தனது முடிவை மாற்றிக் கொண்டார் .

இந்தச் சூழ்நிலையில் நேற்று தனது கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையேயான பிரச்னையை தெருவில் வைத்து தீர்க்க முடியாது நாடாளுமன்றத்தில் தான் தீர்வு காண வேண்டும். எனவே நாடாளுமன்றத்தில்  ஆந்திராவிற்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டது தொடர்பான சட்டம் என்பன உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து 2 மணி நேரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

இந்நிலையில் பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் கண்டித்து ஓய்.எஸ்.ஆர். காங்., சி.பி.ஐ. ,சி.பி.எம். உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சியினர் பந்த்திற்கு அழைப்பு விடுத்தன. ஆந்திராவில் எதிர்க்கட்சிகள் நடத்த உள்ள பந்த் காரணமாக தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு இயக்கப்படும் பஸ்கள் தமிழக எல்லைப் பகுதியான திருத்தணி, மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்தான், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, ஆந்திர மாநிலம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் லாபம் கருதி, தீர்க்கமான தெளிவான நோக்கம் இன்றி, அவசர கதியில் பிரிக்கப்பட்டதாகவும், அதனால் பல்வேறு சிக்கல்களை இந்த அரசு சந்தித்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகக் கூறினார். மேலும் காங்கிரஸ் தீர்க்கமற்ற பார்வையையும் சாடினார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories