பீகாரில்ரூ1710 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன மேம்பாலம் லேசான இடியில் இடிந்து விழுந்த சம்பவம் ..

பீகாரில் 1710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன மேம்பாலம் லேசாக இடி இடித்ததற்கே இடிந்து விழுந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் இன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மேம்பாலம் பீகாரின் கஹார்யா மற்றும் பகல்பூர் மாவட்டங்களை இணைக்கும் 4 வழிப்பாதை பாலமாகும். பகல்பூர் மாவட்டத்தில் உள்ள உத்தரவாகினி கங்கா ஆற்றங்கரையை இணைக்கும் இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு மழை பெய்தபோது பலமாக இடி இடித்தது. அப்போது திடீரென சுமார் 100 அடி நீளத்திற்கு இந்த நவீன பாலம் இடிந்து விழுந்தது. விபத்து ஏற்படும் போது நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மிகவும் தரமற்ற பொருட்களை பயன்படுத்தியதால் தான் இடி இடித்ததற்கே விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் நிதிஷ்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 125 மீட்டர் நீளத்திற்கு இடையில் எந்த தூண்களும் எழுப்பப்படவில்லை. கேபிள் கனெக்டர் என்ற தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட்ட இந்த பாலம் இடியால் இடிந்து விழுந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 25 கிலோ மீட்டர் நீளத்திற்கு 1710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2020ம் ஆண்டு பீகாரில் கோபால்கஞ்ச் என்ற இடத்தில் 264 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சத்ரகாட் பாலம் திறப்பு விழா கண்டு ஒரே மாதத்தில் தண்ணீர் அடித்துக்கொண்டு போன சம்பவம் மறப்பதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது பலரையும் அதிருப்தி யடையச் செய்துள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து
IMG 20220430 161731 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories