தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களுடன் உரையாடிய மோடி !

இந்தியா கல்வி சற்றுமுன்

புது தில்லி:
தேர்வினை எதிர்க்கொள்ளும் மாணவர்களுடன் உரையாடிய மோடி, அவர்களுக்கு சில டிப்ஸ்களையும் கொடுத்தார்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் தாங்கள் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என பிரதமர் மோடி மாணவர்களுக்கு ஆலோசனை கூறும் நிக ழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம். இதனை மாத்திரை போல் உட்கொள்ள முடியாது. நமக்கு நாமே சவால்களை நிர்ணயித்துக் கொண்டு, கடினமாக உழைக்கும் போதுதான் நமக்கே தன்னம்பிக்கை என்பது வரும். தேர்விற்கு ஒருவர் நன்றாக தயார் செய்ய முடியும். ஆனால் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் தேர்வில் வெற்றி பெற முடியாது.

கடவுளின் ஆசியிருந்தாலும் உங்களை நீங்கள் நம்பாவிட்டால், அது பலிக்காது என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். நம்மை மேம்படுத்திக் கொள்ள சிந்திக்க வேண்டும்.

நீங்கள் நாட்டின் பிரதமரோடு பேசவில்லை. உங்கள் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நானும் இங்கு ஒரு மாணவனாகத் தான் வந்துள்ளேன். நீங்கள் எனக்கு எவ்வளவு மதிப்பெண் தருகிறீர்கள் என்று பார்க்க வேண்டும்.

நீங்கள் உங்களுக்குள் இருக்கும் மாணவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். கவனத்தை மேம்படுத்த யோகா பெரிதும் உதவும் என்று பேசினார் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.