பஸ்கட்டண உயர்வு போதுமானதாக இல்லை: வேலைநிறுத்தத்தில் கேரள தனியார் பஸ் உரிமையாளர்கள்

இந்தியா சற்றுமுன்

பஸ்கட்டண உயர்வு போதுமானதாக இல்லை: வேலைநிறுத்தத்தில் கேரள தனியார் பஸ் உரிமையாளர்கள

திருவனந்தபுரம் :

கேரளாவில் அண்மையில் உயர்த்தப் பட்ட பஸ் கட்டண உயர்வு போதுமானதாக இல்லை என்று கூறி, இன்று தனியார் பஸ் உரிமை யாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் பஸ் கட்டணத்தை உயர்த்துவதாக பிப்.14 ஆம் தேதி கேரள அரசு அறிவித்தது. புதிய கட்டண உயர்வஆ மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப் பட்டது. இதன்படி, சாதாரண பஸ்களில் ரூ.8, எக்ஸ்பிரஸ் பஸ்களில் ரூ.11 உயர்த்தப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

ஆனால், தனியார் பஸ் உரிமை யாளர்கள், பஸ் கட்டண உயர்வை ரூ.8 க்கு பதில் ரூ.10 என உயர்த்தக் கோரியிருந்தனர். இது தொடர்பாக பிப். 15 அன்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை கட்டணத்தை ஏற்க தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் மறுத்து விட்டனர். இதனால் பஸ் கட்டண உயர்வு அறிவிப்பு தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறி கேரளா முழுவதும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

இதை அடுத்து, திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.