புது தில்லி: தில்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று காலை பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார். தில்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, அவரது அமைச்சரவை சகாக்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது. இன்று மாலை 4.30க்கு தில்லி மாநில அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறுகிறது.
தில்லி முதல்வராக பதவிப் பிரமாணம் ஏற்றார் அரவிந்த் கேஜ்ரிவால்
Popular Categories