images 21 - 2026

பீஹார் ஒரே குடும்பத்தில் உள்ள 5 பேர் வீட்டில் தூக்கு போட்டு சாவு..

இந்தியா

பீஹார் மாநிலம்  சமஸ்திப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தில் உள்ள 5 பேரின் உடல்கள் வீட்டில் தூக்கு போட்ட நிலையில் கண்டறியப்பட்ட சம்பவம் காவல்துறையினர் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தில் உள்ள ஐவர் தூககுபோட்ட சம்பவம் பற்றி அறிந்த போலீசார் உடனடியாக அந்த வீட்டுக்கு சென்று உடல்களை கைப்பற்றி மருத்துவ உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வீட்டில் தற்கொலை குறிப்பு எதுவும் இருந்து கிடைக்கப்பெறவில்லை.

அண்டை வீட்டுக்காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த குடும்பம் கடனில் சிக்கி தவித்துள்ளது என கூறப்படுகிறது. தடய அறிவியல் குழு ஒன்றும் விசாரணை நடத்த அழைக்கப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர். பீகாரில் ஒரே குடும்பத்தில் 5 பேர் உயிரிழந்து கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

images 21 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.