வாகனத்தின் மேல் பயணித்துக் கொண்டிருந்த போது சோர்ந்து போய் உறக்கிப்போன மனிதர் சாலையில் நழுவி விழுந்து மரணம் அடைந்தார்.
‘பீமடோலு’ எஸ்ஐ ஸ்ரீஹரி ராவ் கூறிய விவரம்: ‘நல்லஜர்ல’ மண்டலம், ‘தெலிகசெர்ல’ கிராமத்தைச் சேர்ந்த ‘மாசர்ல ஏசு’ ஒரு பாண்டு வாசிக்கும் குழுவோடு பயணித்துக் கொண்டிருந்தார்.
அண்மையில் வரிசையாக தொடர்ந்து திருமண சுப முகூர்த்தங்கள் இருந்ததால் பல்வேறு இடங்களுக்கு அந்தக் குழுவோடு சேர்ந்து சென்றுகொண்டிருந்தார் . வியாழக்கிழமை இரவு இவர்களுடைய குழு துவாரகா திருமலையில் நிகழ்ந்த ஒரு திருமணத்திற்கு பாண்டு வாசித்துவிட்டு வெள்ளிக்கிழமை விடிகாலையில் மினி வேனின் (ஐஷர்) மேல் அமர்ந்துகொண்டு பெததாடேபல்லியில் நிகழும் மற்றும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்தார்கள்.
அப்போது கூடூருபாடு எற்ற ஊரின் எல்லையில் பெட்ரோல் பங்கு சமீபத்தில் நித்திரையில் ஆழ்ந்த ஏசு (32) வாகனம் மீது இருந்து நழுவி சாலையில் விழுந்து அங்கேயே இறந்து போனார் .
குழுவில் மீதியிருந்த பேண்ட் வாத்தியக் குழுவினர் அந்த ஆபத்தை கவனிக்காமலேயே தாடேபல்லிகூடம் வரை சென்று விட்டார்கள். இறந்தவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் மூலம் ஹைவே பெட்ரோலிங் ஊழியர் பாண்டு குழுவினருக்கு செய்தி தெரிவித்தார்.
இறந்தவரின் மனைவி மாசர்ல பானு அளித்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக எஸ்ஐ தெரிவித்தார்.