தாயின் இறுதிச் சடங்கில் பங்கு பெறுவதற்கு சென்று கொண்டிருந்த மகனும் மருமகளும் மரணமடைந்த சம்பவம் அதிலாபாத் மாவட்டத்தில் நடந்துள்ளது.
அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள யாவல்கூடா என்ற இடத்தில் இந்த விபத்து நேர்ந்தது. அதிலாபாத் மாவட்டத்தில் ஒரு குடும்பத்தில் தீவிர சோகம் சூழ்ந்தது. தாய் இறந்த செய்தி கேட்டு இறுதிச்சடங்கு செய்வதற்காக சென்று கொண்டிருந்த மகனும் மருமகளும் கூட சாலைவிபத்தில் இறந்தனர்.
அதிலாபாத் மாவட்டம் யாவல்கூடாவைச் சேர்ந்த ரமணம்மா உடல்நிலை சரி இன்றி சனிக்கிழமை உயிரிழந்தார். ரமணம்மாவின் அந்திய கிரியை செய்வதற்காக மகன் ரிட்டையர்டு சிஐ விஜயகுமார் மருமகள் சுனிதா ஞாயிறன்று கிளம்பினார்கள்.
விஜயகுமார் பயணம் செய்த கார் வரங்கல் மாவட்டம் எல்கதுர்த்தி மண்டலம் பென்சிகல்பேட்ட அருகில் எதிராக வந்து கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் விஜயகுமார் அவர் மனைவி சுனிதா அங்கேயே மரணம் அடைந்தனர்.
மகன் மரணமடைந்ததால் ரமணம்மாவின் இறுதிச் சடங்கை நிறுத்தி வைத்தார்கள். சில மணிகளுக்கு உள்ளாகவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம் அடைந்ததால் அந்த குடும்பத்திலும் அந்த கிராமத்திலும் சோகம் சூழ்ந்தது.