கப்பங்கிழங்கு ஸ்வீட் சிப்ஸ்
தேவையானவை:
கப்பங்கிழங்கு (மரவள்ளிக் கிழங்கு) – ஒன்று,
சுக்குப் பொடி – ஒரு சிட்டிகை,
பொடித்த வெல்லம் – ஒரு கப்,
நெய் – சிறிதளவு,
எண்ணெய் – பொரிக்க தே. அளவு
செய்முறை:
கப்பங்கிழங்கின் தோலை சீவிவிட்டு. சிப்ஸ் கட்டையில் சீவி நிழலில் உலர்த்தவும். எண் ணெயை காய வைத்து, உலர்த்திய கிழங்கு வில்லைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
வெல்லத்தை கரைத்து வடிகட்டி… அதில் நெய், சுக்குப்பொடி சேர்த்து பாகு தயாரித்து, பொரித்த சிப்ஸ்களை போட்டு பக்குவமாகப் புரட்டி எடுத்தால்… ஸ்வீட் சிப்ஸ் ரெடி!