- புஷ்பக விமானத்தில் வந்திறங்கிய மணமக்கள். விஜயவாடாவில் வெரைட்டி கல்யாண மண்டபம்.
- வினோதமான திருமண ரிசெப்ஷன்.
புராணங்களில் கூறியது போலவும் சினிமாவில் காண்பிப்பது போலவும் விஜயவாடாவில் திருமண கொண்டாட்டம் நிகழ்ந்தது. இந்த திருமண கொண்டாட்டத்தில் மணமக்கள் புஷ்பக விமானத்தில் ரிசப்ஷன் மண்டபத்துக்கு வந்து இறங்கினார்கள்.
விஜயவாடாவில் ஒரு திருமணத்தில் வருகை தந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர் மணமகனின் குடும்பத்தினர். புராணங்களில் கூறியது போலவும் சினிமாக்களில் காண்பிப்பது போலவும் புது மணமக்களை புஷ்பக விமானம் போன்ற பிரத்தியேக வாகனத்தில் அமர வைத்து திருமண ரிசப்ஷனுக்கு வருகை தரும்படி செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
விஜயவாடாவை சேர்ந்த நம்பூரு நாராயணராவு என்ற வியாபாரி தன் மகன் சந்தீப் திருமண ரிசப்ஷனை வைபவமாக ஏற்பாடு செய்ய நினைத்தார். வித்தியாசமாக யாரும் இதுவரை முன்னெடுக்காத வினோதமாக இந்த நிகழ்ச்சியை செய்ய வேண்டும் என்று எண்ணினார். நினைத்த வண்ணமே நாராயணராவு தன் மகன் சந்தீப்பையும் மருமகள் சாவர்யாவையும் அழைத்து வர புஷ்பக விமானம் போன்ற பிரத்தியேகமான தேர் ஒன்றை தயார் செய்தார்.
திருமண ரிசப்ஷன் மண்டபம் அருகில் மகனையும் மருமகளையும் புஷ்பக விமானத்தில் கிராண்டாக அழைத்துவந்து கிரேன் உதவியோடு 100 அடி உயரத்தில் புதிய மணமக்களை இருத்தி லேசர் லைட் வெளிச்சத்தில் ரிசப்ஷன் மண்டபம் அருகே அழைத்துவந்தார்.
புஷ்பக விமானத்தில் புது மணமக்கள் இருந்த நேரத்தில் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் செல்பி எடுத்துக் கொண்டார்கள். திரைப்படத்தில் காட்டுவது போலவே இந்த புஷ்பக விமானம் சீன் த்ரில்லிங்காக இருந்ததாக திருமணத்திற்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.