கோலிவுட் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கே தல – தளபதி ரசிகர்களின் ட்விட்டர் சண்டை தான்.
கொஞ்ச நாட்களாக அமைதியாக இருந்த ட்விட்டர், ஞாயிற்றுக் கிழமையான இன்று மறுபடியும் ரணகள பூமியாக மாறியுள்ளது.
அஜித் மற்றும் விஜய் இருவரும் மேடைகளிலும், தனது படங்களிலும், இந்த ட்விட்டர் சண்டை தேவையற்றது என்று பல முறை சொன்னாலும், ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகருக்காக அடிக்கடி இப்படி சண்டை செய்து வருகின்றனர்.
தற்போது, வெடித்துள்ள ஹாஷ்டேக் டிரெண்டிங் சண்டைக்கு மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல், நேற்று ஒரு கோடி வியூஸ் மற்றும், ஒரு மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை படைத்தது தான் காரணமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாஸ்டர் படத்தின் அப்டேட்கள் மாறி மாறி வந்த நிலையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக ட்விட்டர் விஜய் ரசிகர்களின் கன்ட்ரோலில் இருந்த நிலையில், இன்று காலை முதலே, அதனை தங்களின் கன்ட்ரோலுக்கு கொண்டு வர தல அஜித் ரசிகர்கள், #THALAFansRulingTwitter என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அஜித் ரசிகர்கள் இன்று காலை முதலே #THALAFansRulingTwitter என்ற ஹாஷ்டேக்கை சென்னை டிரெண்டிங்கில் டிரெண்ட் செய்து வரும் நிலையில், விஜய் ரசிகர்களும், விடுறதா இல்லை #KWRecordsUnderVIJAYfeet என்ற ஹாஷ்டேக்குடன் கிளம்பி வந்துட்டாங்க.. சன் டே லீவு அதுவுமா? கோலிவுட்டின் கிங் யாரு என மாத்தி மாத்தி இருவரது ரசிகர்களும் வழக்கம் போல தங்களது சண்டையை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், நேற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரஜினிக்கு நிகர் அஜித் தான் என்றும் விஜய் அல்ல எனவும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதனை கொண்டாடும் விதமாக அஜித் ரசிகர்கள் இந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். பல விதமான மாஷ் -அப்களையும் அஜித் ரசிகர்கள் உருவாக்கி ஷேர் செய்து வருகின்றனர்.
மெர்சல் டீசர் 1.1 மில்லியன் லைக்ஸ், பிகில் டிரைலர் 2.3 மில்லியன் லைக்ஸ், சர்கார் டீசர் 1.4 மில்லியன் லைக்ஸ், சிங்கப்பெண்ணே லிரிக் வீடியோ 1 மில்லியன் லைக்ஸ், வெறித்தனம் லிரிக் வீடியோ 1.3 மில்லியன் லைக்ஸ், குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ 1.1 மில்லியன் லைக்ஸ், தென்னிந்திய நடிகர்களில் தளபதிக்கு மட்டுமே இது சாத்தியம் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.
???? Perfect Pic For This Tag!????????#KWRecordsUnderVIJAYfeet pic.twitter.com/Ov1Ts0jNpk
— Ŧɧศɭศ℘ศŦɧყ ศгนŋ (@itz_arun05) February 16, 2020
நடிகர் அஜித் எந்தவொரு சோஷியல் மீடியாவிலும் இல்லை என்றும், ஆனால், அவர் படம் பற்றிய அப்டேட் வெளியானால் சோஷியல் மீடியாவே, அவரை பற்றித் தான் பேசும் என்றும், இணைய தளமே தல கட்டுப்பாட்டில் தான் என இந்த தல ரசிகர் செம்ம கெத்தாக ட்வீட் போட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கம் அல்லாத ஒரு தமிழ் படம் 300 கோடியை வசூலித்துள்ளது என்றால் அது பிகில் தான் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ஜீரோ டிரைலர் லைக்குகளை மிஞ்சி, 2 மில்லியன் லைக்குகளை பெற்றது பிகில் டிரைலர். 1.3 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் லிரிக் வீடியோ பாடல் என பல சாதனைகளை தளபதி விஜய்யின் பிகில் சாதித்துள்ளது. முடிஞ்சா தொட்றா பார்க்கலாம் என பலமான போட்டியை விஜய் ரசிகர்களும் வைத்து வருகின்றனர்.
எந்த இனையத்தில் இவர் இல்லை
— மகேஷ் (@Magesh21527961) February 16, 2020
அனால் இவர் படம் அப்டேட் வந்தா
தெறிக்க விடுவார்கள்
இணைய தளமே தல ரசிகர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ????????#Valimai #ValimaiDiwali #THALAFansRulingTwitter #THALAFansRulingTwitter pic.twitter.com/sErvwHDnrN
Ssseeennnjjiitta Poocchhuu..!! ????????
— தல வினிதா ᵛᵃˡᶤᵐᵃᶤ ???? (@ThalaVinitha45) February 16, 2020
A massive Therific Edit..!!????
Perfect video for Today's Tag ????
No Doubt In It..!! We #Thala Fans Will Always Rule All SocialMedias..!! ????#THALAFansRulingTwitter #Valimai pic.twitter.com/pQC9nCPICz
Perfect song for Today's Tag ????????????#THALAFansRulingTwitter pic.twitter.com/tCThMwfI2n
— Vellore Ajith Association_V2 (@AjithFCVellore) February 16, 2020