மைதா மோர் தோசை
தேவையானவை:
மைதா மாவு – ஒரு கப்,
அரிசி மாவு -அரிசி மா டப்
மோர் – கால் கப்,
சீரகம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
மைதா, அரிசி மாவுடன் உப்பு, சீரகம், மோர், தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். தோசைக் கல்லை காய வைத்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து, முறுகலாக எடுக்கவும்.