கரன்சிகளும் சுத்தம் செய்யப்படுகிறது…. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு பயன்படுத்தப்பட்ட கரன்சிகள் சுத்தம் செய்யப்பட்டு பெட்டிகளில் தனிமைப்படுத்தப்படுகின்றன.
சீனாவில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தாக்கியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மக்களுக்கு இடையேயான தொடர்பை குறைப்பது, பொது இடங்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கரன்சி மூலம் வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சீன மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புற ஊதா ஒளி அல்லது அதிக வெப்பநிலையை பயன்படுத்தி யுவான் நோட்டுகளில் உள்ள கிருமிகளை நீக்கிய பின்பு தனிப்பெட்டிகளில் அடைத்து சீல் வைத்து 7 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.