கையில் காசு புழக்கம் இனி திண்டாட்டம்தான்! எல்லாத்துக்கும் காரணம் ‘மோடி’தான்!

Published:

creditcards - 2026

காசு கொடுத்து பொருள் வாங்குவது குறைந்து வருகிறது! இனி எல்லாமே ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் தான் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது!

காசு கொடுத்து இனி பொருள்களை வாங்க முடியுமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். எல்லோரிடத்திலும் எதை வாங்கினாலும் கார்டு இருக்க வேண்டும் இல்லாவிட்டால் e-wallet மூலம் பணம் செலுத்த வேண்டும்!

மின்னணு பணபரிவர்த்தனை மூலம் பரிவர்த்தனையை மேற்கொள்ள அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அதிரடியாக அறிவிக்கப்பட்டு 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் மோதி.  அடுத்து இரவோடு இரவாக பலரும் தங்களின் பணத்தை மாற்றினார்!வங்கிகளில் பெரும் வரிசையில் நின்று பழைய நோட்டுகளை மாற்றிக் கொண்டனர்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் மத்திய அரசு குறிப்பிட்ட ரூபாய்க்கு மேல் பணமாக வைத்திருக்கக்கூடாது; பணபரிவர்த்தனை செய்யக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறது! இதன்படி மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்துள்ளது!

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

பேடிஎம், யுபிஐ, பீம் மற்றும் வங்கிகளின் ஆப்கள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வதை அரசு ஊக்குவித்து வருகிறது! மேலும் இதற்கு ஏற்ப வங்கிகளும் டெபிட் கார்டுகள் கிரெடிட் கார்டுகள் புழக்கத்தையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன!

கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் 3,000 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை மின்னணு-பரிவர்த்தனை முறையில் நடைபெற்றுள்ளது! மக்கள் அந்த அளவுக்கு தங்களின் தேவைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கு ஆன்லைன் மூலமும் மக்கள் மூலமும் பணப் பரிவர்த்தனை செய்துள்ளனர்!

இந்த இலக்கை இன்னும் அதிகரித்து வரும் 2020 மார்ச்சில் முடியும் நிதியாண்டில் 4,000 கோடி ரூபாய் அளவுக்கு பண பரிவர்த்தனை நடைபெற வேண்டும்; அதற்கு ஏற்ப வங்கிகள் ஏடிஎம் மற்றும் ஆப்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது

பல்வேறு துறைகளிலும் ரூபாய் நோட்டுகள் மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனையை பண பரிவர்த்தனை ஆக மாற்ற செய்வதற்கு செபி, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அரசு அமைப்புகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

ஆன்லைன் ஷாப்பிங் பெருகிவரும் நிலையில் காசு கொடுத்து பொருள்கள் வாங்குவது இனி இளைஞர்களிடம் குறைந்துவிடும் என்று நம்பப்படுகிறது. எல்லாமே ஆன்லைன் மூலம் தான் பணம் செலுத்த வேண்டும் என்ற நிலை அதிகரித்து வரும் நிலையில் இன்னும் சில துறைகளில் பணம் கொடுத்து பரிவர்த்தனை நடந்து வருகிறது. இதையும் மாற்றி ஆன்லைன், மொபைல் ஆப்கள், கார்டுகள் மூலம் நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

இதனால் எதிர்காலத்தில் அதிக அளவில் பண பரிவர்த்தனை செய்ய மின்னணு முறையே உதவக் கூடும்.  வங்கிகளும் ரூபாய் மூலம் நடக்கும் பண பரிவர்த்தனையை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ளும்! அதே போல், பணத்தை அளிக்கும் ஏ.டி.எம்.,களும் வெகுவாகக் குறைந்துவிடும்!

Related articles

Recent articles

spot_img