
சொத்தை நகம் மாற
மருதாணி இலையை அரைத்து கோலி உருண்டை அளவு உருண்டை களாகச் செய்யவும். இதில் ஒவ்வொரு வேளைக்கும் இரண்டு உருண்டைகள் வீதம் மூன்று வேளைக்கு உண்டுவர சொத்தை நகங்கள் மறைந்து அழகான நகம் வளரும்.
தீக்காயம் குணமாக
தீயினால் ஏற்பட்ட தீக்காயம் குணமாக பின்வரும் சிகிச்சையைச் செய்யலாம்.
தேங்காய் எண்ணையையும், தெளிந்த சுண்ணாம்பு நீரையும் சரிபாதி எடுத்துக்கொண்டு அதை ஒன்றாகக் கலந்து தீப்பட்ட புண்களின் மீது தடவி. வர புண்கள் ஆறும். தீப்பட்ட புண்களின் மீது மீன் எண்ணையையும் தடவலாம்.
மனக்கவலை நீங்க
48 நாட்களுக்கு சுரக்காயை சமைத்து உணவுடன் சேர்த்து தொடர்ந்து உண்டுவர உடற்பிணிகள் அகலுவதோடு மனக்கவலையும் நீங்கும்.
அலுப்பு அகல
அலுப்பு நோய் என்பது தலைப்பாரமும், மூக்கடைப்பும் சேர்ந்து வருவதால் உருவாகும் சுறுசுறுப்பில்லா மந்த நிலையே ஆகும். இதற்கு விரளி மஞ்சலில் சிறிது விளக்கெண்ணெய் தடவி திரி விளக்கில் கொளுத்தி அதை அணைத்து புகையினை மூக்கு வழியே இழுத்தால் மூக்கடைப்பு போன்ற உணர்வும், தலைப்பாரமும் அகலும்.
வெட்டுக்காயம் ஆற
அருகம் புல்லுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்து வெட்டுக்காயங்களின் மீது பூசிவர வெட்டுக்காயம் ஆறும்.
மூர்ச்சை தெளிய
வெற்றிலையைக் கசக்கி ாறெடுத்து அதனுடன் இரண்டு மிளகின் தூளையும், உப்பையும் சேர்த்து கலக்கி மெல்லிய துணியில் போட்டு கட்ட வேண் எடு பின்பு அதைப் பிழிந்து அதிலிருந்து வரும் சாற்றை ஒரு கண்ணுக்கு இரண்டு துளிகள் வீதம் இரு கண்களிலும் விட மூர்ச்சை தெளியும்.