லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பனிவரகு கொத்தமல்லி புலாவ்!

Published:

panivarku kothamali pulav - 2026

பனிவரகு கொத்தமல்லி புலாவ்
தேவையான பொருட்கள்

1 கப் பனிவரகு அரிசி
1/2 தேங்காய்
1/2 சிறு கட்டுகள் கொத்தமல்லித் தழை
சிறிது எண்ணெய்
1 ஏலக்காய்
2 கிராம்பு
1 தேக்கரண்டி தனியா
4 பற்கள் பூண்டு •
2 வெங்காயம்
1 தேக்கரண்டி இஞ்சி விழுது
2 பச்சை மிளகாய்
சிறிதளவு பட்டை
1 தேக்கரண்டி கசகசா
தேவையான அளவு உப்பு
முந்திரி

செய்முறை

முதலில் பாதி தேங்காயைத் துருவி, அத்துடன் ஏலக்காய், கிராம்பு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, தனியா மற்றும் கசகசா சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

அத்துடன் ஒன்றரை கட்டு கொத்தமல்லித் தழையையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

மீதமிருக்கும் தேங்காயைத் துருவி 2 டம்ளர் அளவு தேங்காய் பால் எடுத்துக்f கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
அத்துடன் அரைத்து வைத்துள்ள
விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பனிவரகு அரிசியை நன்றாக கழுவி 2G நிமிடம் ஊறவைக்கவும்

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

ஒரு மண் சட்டியில் பனிவரகு அரிசி அத்துடன் வதக்கியவற்றைச் சேர்த்து 2 டம்ளர் தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் சிறு தீயில் வேக வைக்கவும்.
நன்றாக வெந்த பின் அடுப்பை அணைத்து மூடிவைக்கவும்.

10 – 15 நிமிடம் சென்று மண் சட்டியை திறந்து மீதமுள்ள கொத்தமல்லியைப் in பொடியாக நறுக்கி வறுத்த முந்திரியையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
சூடான பனிவரகு கொத்தமல்லி புலாவ் தயார்.

Related articles

Recent articles

spot_img