சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் உயிருடன் மீட்கப்பட்ட சிறுவனை முதல்வர் பூபேஷ் பாகெல் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்.
சத்தீஸ்கரில், பிங்ரிட் கிராமத்தை சேர்ந்த, 11 வயது சிறுவன் ராகுல் சாகு, வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டான்
80 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில், தரைமட்டத்தில் இருந்து, 60 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவவை தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மேலாண்மை வீரர்கள், ராணுவத்தினர், போலீசார் உட்பட ஐநுாறுக்கும் மேற்பட்டோர், சிறுவனை மீட்க ஐந்து நாட்களாக போராடினர். 65 அடி ஆழத்தில் குழி வெட்டி அங்கிருந்து சிறுவன் சிக்கிய குழாய்க்கு பாதை அமைத்து நேற்று இரவு 11:40 மணியளவில் பத்திரமாக மீட்டனர்.
பிலாஸ்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ராகுல் சாகுவை முதல்வர் பூபேஷ் பாகெல் இன்று நேரில் சென்று சந்தித்து உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார்.





