இடுக்கி-யானைத் தந்தத்தில் வடித்த சிலைகளை விற்க முயன்ற மூவர் கைது..

ivory robbers - 2026

கேரள மாநிலத்தில் இடுக்கி அருகே யானைத் தந்தத்தில் வடித்த சிலைகளை விற்க முயன்ற கும்பலை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் யானை தந்தத்தில் உருவாக்கிய இரண்டு சிலைகளை சிலர் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக வனத்துறையின் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அந்த கும்பலை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். வனத்துறை நடத்திய விசாரணையில் தொடுபுழா பகுதியை சேர்ந்த ஜோன்ஸ் (வயது 56) இஞ்சியானி பகுதியைச் சேர்ந்த குரியா கோஸ் (47), மடக்கு தானம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (60), ஆகியோர் தான் சிலைகளை விற்பனை செய்ய முயற்சிப்பதாக தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இந்த மூன்று பேர்களிடம் அந்த சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல் வனத்துறையினர் மாறுவேடத்தில் இவர்களை அணுகினார்கள். சிலைகளைப் பார்க்க வேண்டும் விலைக்கு வாங்கிக் கொள்வதாக வனத்துறையினர் மூன்று பேரிடம் கூறினார்கள். இதை நம்பிய மூன்று பேரும் அந்த சிலைகளை வனத்துறையினர் என்று தெரியாமல் வனத்துறை புலனாய்வு அதிகாரிகளிடம் கொண்டு வந்து காட்டியுள்ளனர். அப்போது அந்த இரண்டு சிலைகளை கைப்பற்றிய வனத்துறையினர் மூன்று பேரையும் கைது செய்தனர். இது குறித்து மூன்று பேர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories