தீவிர புயலாக மாறுகிறது சிட்ரங்…

images 2022 10 17T165654.521 - 2026

தீவிர புயலாக மாறுகிறது சிட்ரங் .மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை இன்று காலை விடுக்கப்பட்டுள்ளது ‌.இன்று நிலவரப்படி சாகர் தீவு பகுதியில் இருந்து தெற்கே 430 கி.மீ. தொலைவில் புயல் மையம்கொண்டிருந்தது வங்காளதேச கடலோரம் டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் பகுதிகளுக்கு இடையே புயல் கரையை கடக்கும். புதுடெல்லி: வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்து இருக்கிறது. இந்த புயலுக்கு சிட்ரங் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வங்காளதேசம் நோக்கி நகர்ந்து வருகிறது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், சிட்ரங் சூறாவளி புயல் இன்று காலை நிலவரப்படி சாகர் தீவு பகுதியில் இருந்து தெற்கே 430 கி.மீ. தொலைவிலும், பரிசால் பகுதியில் இருந்து 580 கி.மீ. தெற்கு-தென்மேற்கிலும் மையம் கொண்டுள்ளது.

அடுத்த 12 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும். தொடர்ந்து வடக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளதேச கடலோரம் டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் பகுதிகளுக்கு இடையே நாளை அதிகாலை புயல் கரையை கடக்கும், என்று தெரிவித்து உள்ளது. புயல் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக திரிபுராவில் அதிக மழை பெய்து மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என்றும், அங்கு 24 மணி நேரத்தில் 20 மிமீ வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திரிபுரா, அசாம், மிசோரம், மணிப்பூர், நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலட்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் வரும் 26ம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புயலை முன்னிட்டு இன்றும், நாளையும் வடக்கு வங்காள விரிகுடா பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தலையும் வழங்கி உள்ளது. புயலானது, மேற்கு வங்காளத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்றும் தெரிவித்து உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories