
சுற்றுலாத் துறைக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானுக்கு. மேலும் புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதால் ஈர்ப்பு மேலும் அதிகரிக்கும்.என்று டெல்லி- மும்பை விரைவுச் சாலையின் 246 கி.மீ பகுதியை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் தௌசாவில் இன்று திறந்து வைத்த போது பேசினார்.
டெல்லி- மும்பை விரைவுச் சாலையின் 246 கி.மீ பகுதியை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் தௌசாவில் இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இத்

விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர் வி.கே சிங், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் பிற தலைவர்கள் மேடையில் இருந்தனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் வீடியோ இணைப்பு மூலம் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:- நெடுஞ்சாலைத் திட்டங்கள், துறைமுகங்கள், ரயில்வே, ஆப்டிகல் ஃபைபர் போன்றவற்றில் அரசு முதலீடு செய்து, மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கும்போது, வணிகர்கள், சிறு கடைக்காரர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அது பலம் அளிக்கிறது.
உள்கட்டமைப்பு மீதான முதலீடு அதிக முதலீட்டை ஈர்க்கிறது. இத்திட்டம், 12,150 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டது. இந்த புதிய பிரிவானது ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி இடையிலான பயண நேரத்தை பாதியாக குறைக்கும். பணி நிமித்தமாக டெல்லிக்கு செல்பவர்கள், தங்கள் பணியை முடித்து மாலையில் விரைவில் வீடு திரும்பலாம். விரைவுச் சாலையைச் சுற்றி கிராமப்புற சந்தைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அங்கு உள்ளூர் கைவினைஞர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம்.
இந்த விரைவுச் சாலையானது சரிஸ்கா தேசியப் பூங்கா, கியோலாடியோ தேசியப் பூங்கா, ரந்தம்பூர் தேசியப் பூங்கா மற்றும் ஜெய்ப்பூர், அஜ்மீர் போன்ற நகரங்களுக்கும் பயனளிக்கும். ராஜஸ்தான் ஏற்கனவே அதன்