டெல்லி- மும்பை விரைவுச் சாலையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

1141528 untitled 3 - 2026

சுற்றுலாத் துறைக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானுக்கு. மேலும் புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதால் ஈர்ப்பு மேலும் அதிகரிக்கும்.என்று டெல்லி- மும்பை விரைவுச் சாலையின் 246 கி.மீ பகுதியை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் தௌசாவில் இன்று திறந்து வைத்த போது பேசினார்.

டெல்லி- மும்பை விரைவுச் சாலையின் 246 கி.மீ பகுதியை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் தௌசாவில் இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இத்

திட்டம் டெல்லி- தௌசா- லால்சோட் பாதை தேசிய தலைநகருக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையிலான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது.

images 96 1 - 2026

டெல்லி- மும்பை எக்ஸ்பிரஸ்வே 1,386 கிமீ நீளத்துடன் இந்தியாவின் மிக நீளமான பாதையா அமைகிறது. டெல்லிக்கும் மும்பைக்கும் இடையிலான பயண தூரம் 12 சதவீதம் குறையும் என்றும், 1,424 கிமீ முதல் 1,242 கிமீ என்றும், பயண நேரம் 50 சதவீதம் குறையும் என்றும், தற்போதைய 24 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான டெல்லி- மும்பை விரைவுச்சாலையின் முதல் கட்டம் உட்பட மொத்தம் நான்கு திட்டங்களுக்கு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர் வி.கே சிங், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் பிற தலைவர்கள் மேடையில் இருந்தனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் வீடியோ இணைப்பு மூலம் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:- நெடுஞ்சாலைத் திட்டங்கள், துறைமுகங்கள், ரயில்வே, ஆப்டிகல் ஃபைபர் போன்றவற்றில் அரசு முதலீடு செய்து, மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கும்போது, வணிகர்கள், சிறு கடைக்காரர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அது பலம் அளிக்கிறது.

உள்கட்டமைப்பு மீதான முதலீடு அதிக முதலீட்டை ஈர்க்கிறது. இத்திட்டம், 12,150 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டது. இந்த புதிய பிரிவானது ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி இடையிலான பயண நேரத்தை பாதியாக குறைக்கும். பணி நிமித்தமாக டெல்லிக்கு செல்பவர்கள், தங்கள் பணியை முடித்து மாலையில் விரைவில் வீடு திரும்பலாம். விரைவுச் சாலையைச் சுற்றி கிராமப்புற சந்தைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அங்கு உள்ளூர் கைவினைஞர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம்.

இந்த விரைவுச் சாலையானது சரிஸ்கா தேசியப் பூங்கா, கியோலாடியோ தேசியப் பூங்கா, ரந்தம்பூர் தேசியப் பூங்கா மற்றும் ஜெய்ப்பூர், அஜ்மீர் போன்ற நகரங்களுக்கும் பயனளிக்கும். ராஜஸ்தான் ஏற்கனவே அதன்

சுற்றுலாத் துறைக்கு பெயர் பெற்றது. மேலும் புதிய உள்கட்டமைப்பு திட்டத்துடன் ஈர்ப்பு மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories