
இந்தியா-ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட், இந்தூர், மூன்றாம் நாள், 03.03.2023
–முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
எதிர்பார்த்தபடி ஆஸ்திரேலிய அணி வெற்றி
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன் ஆல் அவுட் & இரண்டாவது இன்னிங்ஸில் 163 ஆல் அவுட் (புஜாரா 59, ஷ்ரேயாஸ் ஐயர் 26, நாதன் லியன் 8/64) ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் 197 ஆல் அவுட் (க்வாஜா 60, லபுசேன் 31, ஸ்மித் 26, ஜதேஜா 4/78, அஷ்வின் 3/44, உமேஷ் யாதவ் 3/12). ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் ஒரு விக்கட் இழப்பிற்கு 78 ரன் எடுத்து இந்திய அணியை 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 76 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது. இன்று காலை ஆட்டம் தொடங்கியதும் அஷ்வின் பந்துவீச்சில் உஸ்மான் க்வாஜா ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ட்ராவிஸ் ஹெட் ஆட்டமிழக்கமல் 49 ரன்னும் லபுசேன் ஆட்டமிழக்காமல் 28 ரன்னும் எடுத்து உணவு இடைவேளைக்கு முன்னதாக அணிக்கு வெற்றியைத் தந்தனர். நாதன் லியோன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் உலகக் கோப்பை இருதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தேர்வு பெற்றுவிட்டது. நான் காவது போட்டியில் ஒருவேளை இந்திய அணி வெற்றி பெறவில்லையென்றால் அது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படும்.
அடுத்த டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் மார்ச்சு 9ஆம் தேதி தொடங்குகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது ஸ்ரீகர் பரத் இருவரில் ஒருவருக்குப் பதிலாக வேறு ஒரு வீரரை ஆடவைப்பது பற்றி கிரிக்கட் போர்ட் யோசிக்கலாம்.