அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா விடம் விசாரணை துவங்கியது..

957134 1 - 2026

டெல்லி அரசின் மதுவிலக்கு கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு அவரை மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு  தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் ராம்சந்திர பிள்ளை என்பவரை அமலாக்கத்துறையினர் திங்களன்று கைது செய்தனர்.

அவர் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா மற்றும் பிறருடன் தொடர்புடையதாக கூறப்படும் ‘சவுத் குரூப்’ மதுபான கார்டலை பிரதிநிதித்துவப்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவின் மகளும் எம்எல்சியுமான கவிதாவிடம் அமலாக்கத்துறை  விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கவிதாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தனர். அதில் ‘‘மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராக வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் நடைபெற்ற சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் எம்.எல்.சியுமான கவிதா அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார்.

அமலாக்கத்துறை கவிதாவை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக அவரது கட்சி நேற்று குற்றம் சாட்டியதோடு இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கூறியிருந்தந்து. இந்நிலையில் இன்று விசரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா ஆஜராகினார். அவர் ஆஜராகியுள்ளதை அடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories