மணமான மறுநாளே மாரடைப்பில் மரணித்த புதுமணத் தம்பதி! உ.பி.யில் சோகம்!

159577 wedding day - 2026

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமணம் முடிந்த மறுநாளே மணமக்கள் இருவரும் மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து ஒரே சிதையில் அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. இது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

உத்தர பிரதேசத்தின் பரூச் மாவட்டத்தில் உள்ள கைசர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பிரதாப் யாதவ் (வயது 22) என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா (வயது 20) என்ற பெண்ணை கடந்த மே மாதம் 30ஆம் தேதி உறவினர்கள் புடை சூழ  திருமணம் செய்து கொண்டார்.  வரவேற்பு, ஊர்வலம், விருந்து உபசரிப்பு எல்லாம் உற்சாகமாகக் கழிந்த பின்னர், திருமணம் முடிந்த மறுநாளான மே 31ம் தேதி மணமகன் பிரதாப் வீட்டிற்கு மணமக்கள் இருவரும் வந்தனர்.

குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உற்சாகமாக அன்றைய பொழுதைக் கழித்த மணமக்கள் அன்றிரவு துாங்கச் சென்றனர். அதன் பின், மறுநாள் மதியம் வரை இவர்கள் இருந்த அறைக் கதவு திறக்கப் படவில்லை. என்னதான் திருமண அலுப்பில் உறங்கினாலும் மதியம் வரையிலுமா உறங்கிக் கொண்டிருப்பார்கள் என்று சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே மணமக்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் படுக்கயில் சடலமாகக் கிடந்தது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

மணமக்கள் இருவரின் உடல்களும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே உடற்கூராய்வு செய்த பின்னர் அளிக்கப் பட்ட அறிக்கையின்படி, மணமக்கள் இருவரும் ஒரே நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது  தெரிய வந்தது. இது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் உறவினர்கள் முன்னிலையில் இருவரின் உடல்களும் ஒரே சிதையில் வைத்து எரிக்கப்பட்டன.  

மணமக்கள் இருவருக்கும் இதய நோய் பிரச்னைகள் எதுவும் இல்லாத நிலையில், ஒரே நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பெரும் கேள்விக் குறியாகவே இருந்தது. இருவரது உடல்களின் முக்கிய உறுப்புகள் வழக்கு விசாரணைக்காக சேகரிக்கப்பட்டு, லக்னோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories