December 6, 2025, 7:18 AM
23.8 C
Chennai

மத்தியில் மீண்டும் பாஜக., ஆட்சி! கருத்துக் கணிப்பில் தகவல்!

karnataka election modi - 2025
#image_title

மத்தியில் மீண்டும் பாஜக., ஆட்சியே அமையும், மோடியே பிரதமராக வருவார் என்று ஒரு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியா டி.வி. மற்றும் சி.என்.எக்ஸ் டி.வி ஆகியவை இணைந்து நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தின. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த கருத்து கணிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன. தற்போது மக்களவையில் பா.ஜ.க.வுக்கு 303 எம்.பி.க்கள் உள்ளனர். வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வின் பலம் குறையக்கூடும். அந்த கட்சி 290 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜனதா 73-ல் வெற்றி பெறும். குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றும்.

பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 318 தொகுதிகளை கைப்பற்றி 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும்.

ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 66 தொகுதிகளை கைப்பற்றும். இந்த கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கு தற்போது 22 எம்.பி.க்கள் உள்ளனர். வருகிற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெறும்.

ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.-19, ராஷ்டீரிய ஜனதா தளம்-7, ஐக்கிய ஜனதா தளம்-7, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு-11, தேசியவாத காங்கிரசின் சரத்பவார் பிரிவு-4, இடதுசாரி கட்சிகள்-8 உள்பட ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி 175 தொகுதிகளைக் கைப்பற்றும்.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி-73 ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-7 தொகுதிகளைக் கைப்பற்றும். பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-24, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-16 தொகுதிகளை கைப்பற்றும்.

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-24, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-24-ல் வெற்றி பெறும்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-9, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-30ல் வெற்றி பெறும். மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-12, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-30ல் வெற்றி பெறும்.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா கூடடணி-20, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-7ஐ கைப்பற்றும். குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணியே வெற்றி பெறும். ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளையும் ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணியே கைப்பற்றும். தே.ஜ. கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. ராஜஸ்தானில் மெத்தம் உள்ள 25 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-21, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-4ல் வெற்றி பெறும்.

ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. அந்த மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 18, தெலுங்கு தேசம் 7 தொகுதிகளைக் கைப்பற்றும்.

ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-8, பிஜு ஜனதா தளம் 13-ல் வெற்றி பெறும். ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-24, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-5ஐ கைப்பற்றும்.

தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-6, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-2, பாரத் ராஷ்டிரிய சமிதி-8ல் வெற்றி பெறும். அசாமில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-12, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-1ல் வெற்றி பெறும்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 11 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-7, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-4 தொகுதிகளை கைப்பற்றும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-13, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றிபெறும். அரியானாவில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-8, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி 2 இடங்களை கைப்பற்றும்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளையும் ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணியே கைப்பற்றும். டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-5, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-2ல் வெற்றி பெறும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 5 தொகுதிகளையும் தே.ஜ. கூட்டணி கைப்பற்றும். காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் தே.ஜ. கூட்டணி-3, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி-2ல் வெற்றி பெறும்.

இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி-3, ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றிபெறும். மணிப்பூரில் மொத்தம் உள்ள 2 தொகுதிகளையும் ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி கைப்பற்றும். இதர வடகிழக்கு மாநிலங்களில் 9 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும். கோவாவில் மொத்தம் உள்ள 2 தொகுதிகளையும் தே.ஜ. கூட்டணி கைப்பற்றும்.

இவ்வாறு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories