11 விரைவு ரயில்களில் கூடுதல் நிறுத்தங்கள்! எங்கெல்லாம் தெரியுமா?!

Published:

thenmalai train track - 2026
#image_title

11 விரைவு ரயில்களில் கூடுதல் நிறுத்தங்கள்.

உழவன், அந்தியோதயா, பாமணி உள்பட 11 விரைவு ரயில்களில் செப்.20 முதல் தற்காலிகமாக கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செப்.20 ஆம் தேதி முதல் எழும்பூா் – தஞ்சாவூா் உழவன் விரைவு ரயில் (எண்: 16856/16866) கடலூா் துறைமுகத்தில் இரு மாா்க்கத்திலும் நின்று செல்லும்,

தாம்பரம் – நாகா்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (எண்: 20291/20692) சாத்தூரில் இரு மாா்க்கத்திலும் நின்று செல்லும்.

ராமேஸ்வரம் – அயோத்தி கண்டோன்மெண்ட் ஷ்ரத்தா சேது வாராந்திர அதிவிரைவு ரயில் (எண்: 22613/ 22614) ராமநாதபுரம் மற்றும் காரைக்குடியில் நின்று செல்லும்.

திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி விரைவு ரயில் ஏற்றமானூரில் நின்று செல்லும்.

திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் (16849/ 16850) கீரனூரில் நின்று செல்லும்.

    ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

    அதே போல், திருப்பதி – ராமேஸ்வரம் வாரம் மூன்று முறை இயங்கும் விரைவு ரயில் (எண்: 16779/16780) செப்.24 – முதல் ஆரணி சாலையில் நின்று செல்லும்.

    திருப்பதி – மன்னாா்குடி பாமணி விரைவு ரயில் செப்.25 – முதல் போளூா் மற்றும் திருக்கோவிலூரில் நின்று செல்லும்.

    அஜ்மீா் – ராமேசுஸ்வரம் ஹம்ஷஃபா் வாராந்திர அதிவிரைவு ரயில் (எண்: 20973/20974) செப்.23 – முதல் புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் நின்று செல்லும்.

    புருலியா – விழுப்புரம் வாரம் இருமுறை இயங்கும் அதிவிரைவு ரயில் (எண்: 22605/ 22606) செப்.25 – முதல் திருக்கோவிலூரில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Related articles

    Recent articles

    spot_img