
குறைந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 6 சதங்களை விளாசி இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மொஹாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றது. 2-வது ஆட்டம் நேற்று இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஷுப்மன் கில் 104 ரன்கள் (97 பந்துகள், 6 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.
Dhinasari News WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
அதிக சதம்: ஓராண்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் ஷுப்மன் கில்லும் இணைந்தார். இதற்கு முன்பு இந்தச் சாதனையை விராட் கோலி (4 முறை), ரோஹித் சர்மா (3 முறை), சச்சின் டெண்டுல்கர் (2 முறை), ராகுல் திராவிட், சவுரவ் கங்குலி, ஷிகர் தவண் (தலா ஒரு முறை) ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் குறைந்த ஒரு நாள் போட்டிகளிலேயே 6 சதங்களை விளாசியவர் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்தார். ஷுப்மன் கில் 35 போட்டிகளிலேயே இந்த சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக ஷிகர் தவண் 46 போட்டிகளிலும், கே.எல்.ராகுல் 53 போட்டிகளிலும், விராட் கோலி 61 போட்டிகளிலும், கவுதம் கம்பீர் 69 போட்டிகளிலும் இந்த சாதனையைப் படைத்திருந்தனர்.