வெற்றிகரமான தொடக்கம்; விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி58

pslv c58 - 2026
#image_title

‘பி.எஸ்.எல்.வி., – சி 58’ ராக்கெட் வாயிலாக, ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளை, ‘இஸ்ரோ’ நிறுவனம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ”செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது, எக்ஸ்போசாட் தனது ஆய்வு பணியை தொடங்கியது” என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான ’இஸ்ரோ’ ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., – சி 58 ராக்கெட் வாயிலாக, ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோள், இன்று காலை 9:10 மணிக்கு விண்ணில் செலுத்தியது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இந்த செயற்கைக்கோளில், ‘எக்ஸ்ஸ்பெக்ட், பொலிக்ஸ்’ போன்ற அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. மொத்தம், 469 கிலோ எடை உடைய செயற்கைக்கோள், பூமியில் இருந்து, 650 கி.மீ., தொலைவில் உள்ள புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும்.

இந்த செயற்கைக்கோள், வானியலின் இயக்கம், விண்வெளியில் காணப்படும் நிறமாலை, துாசு, செயலில் உள்ள விண்மீன் கருக்கள், மேகக்கூட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும்.

இந்தாண்டு முதலாவதாக ஏவப்படும், பி.எஸ்.எல்.வி., – சி 58 ராக்கெட், பி.எஸ்.எல்.வி., வகையில் 60வது ராக்கெட். இதன் உயரம் 44.4 மீட்டர். இந்த ராக்கெட், எரிபொருள், செயற்கைக்கோள் என, மொத்தம் 260 டன் எடை கொண்டது.

முன்னதாக, இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது. விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலா-வை ஆய்வு செய்ய உள்ளது எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் என்று இஸ்ரோ தெரிவித்தது.

2024, ஜன 1 இன்று விண்ணில் ஏவப்படும் (‘XpoSat) எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் வானியல் நிகழ்வுகளை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்காக ஏவப்படுகிறது. அதற்காகவே இந்த எக்ஸ்போசாட் எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்விசி-58 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி காலை 9.10மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படும் 2-வது செயற்கைக்கோளான எக்ஸ்போசாட் 469 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். இது பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ.உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்காக போலிக்ஸ் (எக்ஸ்ரே போலரிமீட்டா்), எக்ஸ்பெக்ட் (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோகிராபி) ஆகிய 2 சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை விண்வெளியில் பரவும் எக்ஸ் கதிர்களின் துருவ முனைப்பு அளவு மற்றும்கோணத்தை அளவிடுதல், நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் நெபுலா உட்பட பல்வேறு அம்சங்களை ஆராயும்.

மேலும், ஒரேநேரத்தில் எக்ஸ் கதிர் மூலங்களின் நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories