திரிபுரா முதல்வராகிறார் பிப்லப் குமார் தேவ்

இந்தியா சற்றுமுன்

திரிபுரா சட்டப் பேரவை எம்.எல்.ஏ.க்களின் தலைவராக பிப்லப் குமார் தேவ் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

நடந்து முடிந்த திரிபுரா சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க, கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதனால் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் மாணிக் தாகுர் பதவி விலகினார். இதனை அடுத்து பாஜக., சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவரைத் தேர்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் ஜூவல் ஓரம் தலைமையில் அகர்தலாவில் பா.ஜ.க, மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதல்வராக பிப்லப் குமார் தேவும், துணை முதல்வராக ஜிஷ்ணு தேபர்மாவும் தேர்வு செய்யப்பட்டனர் இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.