தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
சாதாரண மனுஷனுக்குக் கூட தெரியும், ஒரு சிறிய வீட்டைக் கட்டணும்னா கூட, அப்ப மறுபடிமறுபடி மேஸ்திரியை மாத்த மாட்டாங்கய்யா.
இப்ப இந்த சமாஜ்வாடி காங்கிரஸ்….. இண்டிக் கூட்டணிக்காரங்க, இவங்க சொல்றாங்க, அஞ்சு ஆண்டுகள்ல அஞ்சு பிரதம மந்திரிகளாம்.
இப்ப நீங்களே சொல்லுங்கய்யா. இந்த அஞ்சு ஆண்டுகள்ல அஞ்சு பிரதம மந்திரிகளை, யாராவது வச்சுப்பாங்களா என்ன? இப்படி மேஸ்திரியவே யாரும் வச்சுக்க மாட்டாங்கன்னா, அப்ப பிரதம மந்திரிய…… சிரிப்பு என்னத்தைச் சொல்ல.
ஏன்னா இவங்களுக்கு கூடிக் கூத்தடிக்கணும். இப்ப நீங்களே சொல்லுங்க, தன்னோட நாற்காலியை, காப்பாதிக்கவே பிரதமருக்கு நேரம் சரியா இருக்கையில, அவரு எங்க தேசத்தை வலுவானதா ஆக்க போறாரு?