மூன்றாவது மற்றும் இறுதி டி20 ஆட்டம் – சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி
தொடரை வெற்றியுடன் தொடங்கிய பயிற்சியாளர் காம்பிர்!
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —
இந்திய அணி (9 விக்கெட்டுக்கு 137, கில் 39, பராக் 26, தீக்ஷனா 3-28, ஹசரங்க 2-29) இலங்கை அணியை ( 8 விக்கெட்டுக்கு 137, பெரேரா 46, குசல் மெண்டிஸ் 43, ரிங்கு 2-3, சூர்யகுமார் 2-5) சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றது.
ஒரு T20I இன் மிகவும் வினோதமான முடிவுகளில் ஒன்றில், பல்லேகலேவில் நடந்த சூப்பர் ஓவரில் இந்தியா இலங்கையை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.
டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தனர். 50 ரன்களை கடப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்க தடுமாறியது. இறுதியில் வாஷிங்டன் சுந்தர் ரியான் பராக் அதிரடியில் இந்திய அணி 20 ஓவர்களில் 137 ரன் எடுத்தது.
இந்திய அணி விக்கெட் வீழ்ச்சி
11/1 (ஓய் ஜெய்ஸ்வால், 1.6 ஓவர்கள்) 12/2 (எஸ். சாம்சன், 2.5 ஓவர்கள்) -14/3 (ஆர் சிங், 31 ஓவர்கள்) 30/4 (எஸ் யாதவ், 5.4 ஓவர்கள்) 48/5 (எஸ். துபே.8.4 ஓவர்கள்) 102/6 (எஸ். கில், 15.2 ஓவர்கள்) 105/7 (ஆர் பராக், 15.5 ஓவர்கள்) 137/8 (டபிள்யூ சுந்தர், 19.5 ஓவர்கள்) 137/9 (எம். சிராஜ், 19.6 ஓவர்கள்)
போட்டியின் பெரும்பகுதிக்கு, இலங்கை மூன்று துறைகளிலும் இந்தியாவை விஞ்சியது, ஆனால் இறுதியில் அவர்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தனர். கடைசி இரண்டு ஓவர்களில் 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்க அவர்களுக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
டி20 போட்டிகளில் இதுவரை பந்து வீசாத ரின்கு சிங், 19வது ஓவரை வீசி, வெறும் 3 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
20ஆவது தொடக்கத்தில் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பு 85%ஆஅக இருந்தது. நாலாவது பந்தில் 55% ஆக மாறியது.
இதனால் இலங்கைக்கு ஆறு பந்துகளில் ஆறு ரன் தேவைப்பட்டது. முகமது சிராஜுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தது, ஆனால் பந்து நன்றாக ஸ்விங் ஆனாதால் சூர்யகுமார் யாதவ் தானே பந்துவீச முடிவு செய்தார். அவரும் முதல்முறையாக டி20யில் பந்துவீசினார். மேலும், இந்தியா ஓவர்-ரேட்டிற்கு பின்தங்கியிருந்தது மற்றும் 30-யார்டு வட்டத்திற்கு வெளியே நான்கு பீல்டர்களை மட்டுமே நிறுத்த முடியும்.
ஆனால் சூர்யகுமார் ஐந்து ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை சமன் செய்தார்.
இலங்கை அணியின் விக்கெட் வீழ்ச்சி
58/1 (பி. நிசங்க, 8.5 ஓவர்கள்) 110/2 (கே. மெண்டிசு. 15.2 ஓவர்கள்) 117/3 (டபிள்யூ ஹசரங்கா, 16.3 ஓவர்கள்) 117/4 (சி. அசலன்க, 16.4 ஓவர்கள்) 129/5 (கே) பெரேரா, 18.2 ஓவர்கள்) 132/6 (ஆர் மென்டிஸ், 18.6 ஓவர்கள்) 132/7 (கே மென்டிஸ், 19.2 ஓவர்கள்) 132/8 (எம். தீக்சன. 19.3 ஓவர்கள்)
சூப்பர் ஓவரை வாஷிங்டன் சுந்தர் வைட் மூலம் தொடங்கினார். ஆனால் குசல் பெரேரா மற்றும் பதும் நிஸ்ஸங்க ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் எல்லையில் கேட்ச் செய்தார்.
இந்தியாவிற்கு அவர்களின் சூப்பர் ஓவரில் மூன்று ரன் மட்டுமே தேவை என்ற நிலையில், மஹீஷ் தீக்ஷனாவின் முதல் பந்தை ஷார்ட் ஃபைன் லெக் நோக்கி சூர்யகுமார் ஸ்வீப் செய்தார், அங்கு அசித்த பெர்னாண்டோ தனது கால்கள் வழியாக பந்தை நான்கு ஓட்டங்களுக்கு அனுப்பினார். இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றொயும் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர் வெற்றியும் இந்திய அணிக்கு கிடைத்தது.
வாஷிங்டன் சுந்தர் ஆட்ட நாயகனாகவும் சூரியகுமார் யாதவ்தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.