December 6, 2025, 7:07 AM
23.8 C
Chennai

இந்தியா வங்கதேசம் – இரண்டாவது டெஸ்ட் – கான்பூர் – முதல் நாள்

ind vs ban test - 2025
#image_title

இந்தியாவங்கதேசம் – இரண்டாவது டெஸ்ட் – கான்பூர் – முதல் நாள் – 27.09.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கனமழையால் முதல் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது

          டாஸ்வென்ற இந்திய அணி வங்கதேச அணியை மட்டையாடச்சொன்னது. ஆட்டம் நிறுத்தப்பட்டபோது அந்தஅணி 3 விக்கெட்டுக்கு107 (மோமினுல் 40*, சாண்டோ 31, ஆகாஷ் தீப் 2-34) ரன் எடுத்திருந்தது. கான்பூரில்இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் மோசமான வெளிச்சம் மற்றும் கனமழை காரணமாக 35 ஓவர்கள் மட்டுமே சாத்தியமாகியது,

          26ஆம்தேதி இரவு முழுவதும்பெய்த மழையால் அவுட்பீல்ட் ஈரமாக இருந்ததால், இன்று காலை டாஸ் ஒரு மணி நேரம்தாமதமானது. இறுதியில் டாஸ் நடந்தபோது, ​​நாணயம்இந்தியாவுக்கு சாதகமாக விழுந்தது. மேகமூட்டமான வானத்தின் கீழ், ரோஹித் ஷர்மா முதலில் பந்துவீசுவதைத் தேர்ந்தெடுப்பதில் தயக்கம் காட்டவில்லை – 2015க்குப் பிறகு இந்தியா நம் நாட்டில் நடைபெறும் டெஸ்ட் ஒன்றில்அவ்வாறு செய்தது இதுவே முதல் முறை.

          ரோஹித்மாற்றமில்லாத அணியுடன் அதாவது தனதுமூன்று வேகப்பந்துவீச்சாளகளுடன் களமிறங்கினார்.அதன் மூலம் கள நிலைமையைப் பயன்படுத்திக்கொள்ள எதிர்பார்த்தார். ஆடுகளம் கொஞ்சம் மென்மையாகவும், வழக்கமான கான்பூர் மேற்பரப்பை விட சற்று அதிகமானபுல்வெர்களோடும் காணப்பட்டது. வங்கதேசஅணீ நிலைமைகளை முற்றிலும்வித்தியாசமாகப் பார்த்தது. அவர்கள்முதலில் பேட்டிங் செய்ய விரும்பியது  மட்டுமல்லாமல்மூன்று சுழற்பந்து வீச்சாளர்களையும் தேர்வு செய்தனர்.

          ஜஸ்பிரித்பும்ரா பந்தை இருபுறமும் அதாவது வலது மற்றும் இடதுபுறங்களில் ஸ்விங் செய்தார். தொடக்கத்தில் மூன்றுமெய்டன் ஓவர்களை வீசினார், ஆனால் விக்கெட் எடுக்க முடியவில்லை. ஷத்மான் இஸ்லாம் மற்றும் ஜாகிர் ஹசன் ஆகியோர் தொடக்கஆட்டங்களில் தப்பித்ததால் முகமது சிராஜ் எந்த வெற்றியையும் காணவில்லை.அந்தக் கட்டத்தில் 20 பந்துகளை எதிர்கொண்ட போதிலும் ஜாகிரால் தனது கணக்கைத் திறக்கமுடியவில்லை.

          ஒன்பதாவதுஓவரில் ஆகாஷ் தீப் அறிமுகப்படுத்தப் பட்டபோது நிலைமை மாறியது. அவரது மூன்றாவது பந்தில், அவர் ஜாகிரை ஆட்டமிழக்கச்செய்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது வலது பக்கம்கீழே சென்று இரு கைகளாலும் அதைத்தூக்கிப் பிடித்தார். கேட்ச்சின் நியாயம் குறித்து டிவி நடுவரிடம் ஆலோசிக்கப்பட்டது.அவருக்கு ஒரே ஒரு நல்லகோணம் மட்டுமே இருந்தது, அந்தக் கோணத்தில் பந்து நேராக ஜெய்ஸ்வாலின் கைகளுக்குச் சென்றது என்பதை ஊகிக்க அவருக்கு போதுமானதாக இருந்தது.

          சிலஓவர்கள் கழித்து ஆகாஷ் தீப் மீண்டும் ஒருவிக்கட் பெற்றார். வீசும் கை விக்கெட்டைச் சுற்றிவர ஆகாஷ் தீப் வீசிய பந்து, ஷாட்மேனின்பேட்டின் உட்புற விளிம்பை அடித்து, கால் பட்டையில் அடிக்க அவர் எல்.பி.டபிள் யூ ஆணார். பெரியஎல்பிடபிள்யூ முறையீட்டை ஆன்-பீல்ட் அம்பயர்மறுத்தார் – பந்து, சிறந்த லெக் ஸ்டம்பில் க்ளிப்செய்யப்பட்டிருக்கும் என்று தோன்றியது. இந்தியா மறுபரிசீலனையைத் தேர்ந்தெடுத்தது, அனைவருக்கும் ஆச்சரியமாக, லெக் ஸ்டம்பின் ஒருநல்ல துண்டில் பந்து தாக்கியதை ப்ரொஜெக்ஷன் காட்டியது.

          சாண்டோஒரு நேர்மறையான மனநிலையுடன் விளையாட வந்திருந்தார். மற்றும்பேட்டின் வெளிப்புற பாதியில் பட்ட எட்ஜுகள் மூலமாக சிலஸ்ட்ரீக்கி பவுண்டரிகளை எடுத்தார். மோமினுலும் தற்காலிகமாகத் நன்றாக ஆடத் தொடங்கினார். பும்ராவைகவர்கள் வழியாக அடித்து ஃபோர் எடுப்பதற்கு முன்அவர் ஆகாஷ் தீப் மற்றும் சிராஜ்ஆகியோரிடமிருந்து தலா ஒரு பவுண்டரியை எடுத்தார்.

          மதியஉணவுக்கு முந்தைய கடைசி ஓவர் நடந்து கொண்டிருந்போது,தூறல் பெய்யத் தொடங்கியது, இதனால் இரண்டாவது அமர்வு 15 நிமிடங்கள் தாமதமானது. ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது, ​​ஆர் அஷ்வின் வீசும் கை விக்கட்டின் மேல் வர பந்து வீசி, ஷாண்டோவின்மட்டையின் உள் விளிம்பில் பந்து பட்டு அவரது கால் பட்டையில்தாக்கியது; அதனால் அவர் எல்பிடபிள்யூ 31 ரன்களில்ஆட்டமிழந்தார். இது மூன்றாவதுவிக்கெட்டுக்கான 51 ரன் கூட்டை முடிவுக்குகொண்டு வந்தது.

          அதன்பிறகு மோமினுல் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் சில நிமிடங்கள் பதற்றமாகஆடினர். ஆகாஷ் தீப்முஷ்பிகுரின் வெளிப்புற விளிம்பில் இருந்து பந்து வர ஒரு கேட்ச்வாய்ப்பு கிட்டியது. ஆனால் அதுமூன்றாவது ஸ்லிப்புக்கும் கல்லிக்கும் இடையிலான இடைவெளியில் நான்கு ரன்களுக்குச் சென்றுவிட்டது. மூன்றுஓவர்களுக்குப் பிறகு, மொமினுல் பும்ராவின் பந்த பவுண்டரிக்கு விரட்டினார்.

          அச்சமயத்தில் ஆட்டத்தைத் தொடர முடியாத அளவுக்கு இருட்டாக மாறி, மழை பெய்யத் தொடங்கியது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு முன்னதாகவே நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்த முடிவெடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories